வனம் திரை விமர்சனம் ரேட்டிங் –2.75 /5

நடிகர் நடிகைகள் – வெற்றி,
ஸ்ம்ருதி வெங்கட், அனு சித்தாரா, வேலராமமூர்த்தி, அழகம்பெருமாள், பிரதீப், தேசிங்குராஜா, மற்றும் பலர்.
தயாரிப்பு – கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்.
இயக்கம் – ஸ்ரீகண்டன் ஆனந்த்.
ஒளிப்பதிவு – விக்ரம் மோகன்.
படத்தொகுப்பு – பிரகாஷ் மப்பு.
இசை– .ரான் ஈத்தன்.
திரைப்படம் வெளியான தேதி – 26 நவம்பர் 2021
ரேட்டிங் –2.75 /5
இயற்கையை சூழலை நாம் அழித்தால் ஒரு காலத்தில் அது நம்மையே அழித்துவிடும்.
அது பற்றி தெரிந்திருந்தும் இந்த மனித குலம் காடுகளையும், இயற்கை வளங்களையும் அழித்துக் கொண்டிருக்கிறது.
இந்த சமூக அக்கறையுடன் ஏற்கெனவே சில பல திரைப்படங்கள் வந்துள்ளன.
இந்த அற்புதமான திரைப்படத்தின் தலைப்பையே இதுவரை தமிழ் திரைப்பட உலகில் யாரும் வைக்காமல் விட்டது ஆச்சரியம்தான்.
மலைவாழ் மக்கள் வசித்த வந்த இடத்தில் அவர்களை அப்புறப்படுத்தி அந்தக் காலத்தில் ஜமீன்தார் வேல ராமமூர்த்தி கலைக் கல்லூரி ஒன்றைக் கட்டியிருக்கிறார்.
கதாநாயகன் வெற்றி பழமையான அரசு ஒவிய சிறப்பக் கல்லூரியில் படிக்க செல்கிறார்.
விடுதியில் குறிப்பிட்ட ஒரு அறையில் மட்டும் தொடர் மரணங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது.
கதாநாயகன் வெற்றி தங்கியிருக்கும் அறையில் அவரது நண்பர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இது எதனால் நடக்கிறது என்று கண்டுபிடிக்க முயலுகிறார் கதாநாயகன் வெற்றி.
அப்போது கதாநாயகி ஸ்மிருதி வெங்கட் அதே கல்லூரிக்கு டாக்குமெண்டரி எடுக்க வந்து சேருகிறார்.
கதாநாயகன் வெற்றியும் கதாநாயகி ஸ்மிருதி வெங்கட்டும் நட்பாகிறார்கள்.
கதாநாயகி ஸ்மிருதி வெங்கட்டுடன் இணைந்து மர்ம மரணங்கள் குறித்து ஆராய முயற்சிக்கிறார்.
அப்போது, பல அமானுஷ்ய விஷயங்களும், திடுக்கிடும் அசம்பாவிதங்களும் வெளியே வருகிறது.
இறுதியில் மர்ம மரணங்களுக்கான காரணங்களை கதாநாயகன் வெற்றி கண்டுபிடித்தாரா? இல்லையா? அமானுஷ்ய விஷயங்கள் நடக்க காரணம் என்ன? என்பதுதான் இந்த வனம் திரைப்படத்தின் மீதிக்கதை.
கதாநாயகன் நடித்திருக்கும் வெற்றி நடுத்தர குடும்பத்து இளைஞராக வருகிறார்.
கண்களாலேயே நமக்குத் திகிலூட்டுகிறார்.
கதாநாயகன் வெற்றி ஏற்கனவே நடித்த
8 தோட்டாக்கள், ஜீவி திரைப்படங்களைப் போலவே இதிலும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான கதாபாத்திரம். கதையின் சீரியஸ் தன்மைக்கு ஏற்றபடி உடல்மொழியும், வசன உச்சரிப்பும் பொருத்தமாக இருக்கிறது.
ஓவியம் வரையும், சிற்பம் செதுக்கும் அசாத்திய திறமை கொண்ட அமைதியான கல்லூரி மாணவர்.
ஆழமான பார்வையுடன் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்திருக்கிறார் கதாநாயகன் வெற்றி.
டாகுமென்டரி படமெடுக்கும் யூ டியூப் சேனல் நிர்வாகியாக ஸ்மிருதி வெங்கட் ஒரு மெச்சூர்டான கதாபாத்திரம்.
இவரும் கதாநாயகன் வெற்றியும் கதாநாயகி ஸ்மிருதி வெங்கட்.
காதலிப்பது கூட கனிவான காட்சிகளாகவே திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
தனி கதாநாயகியாக வலம் வரக் கூடிய அனைத்துப் பொருத்தங்களுடன் இருக்கிறார் கதாநாயகி ஸ்மிருதி வெங்கட்.
கதாநாயகி ஸ்மிருதி வெங்கட் வந்த பிறகு திரைப்படம் இன்னும் வேகமாக நகர்கிறது.
ஜமீன்தாராக வரும் வேல ராமமூர்த்தியின் மிரட்டலான நடிப்பும், வனத்திற்குள் வாழும் பளியர்களின் பரிதாப வாழ்க்கையும் நெஞ்சில் பதிகிறது.
வனப்பெண் மல்லியாக அனுசித்தாரா மேக்கப் முகம் உறுத்தல்.
அழகம் பெருமாளின் சஸ்பென்ஸ் கதாபாத்திரமும், அந்த மாயக்கண்ணாடியும் திரைப்படத்திற்கு பிளஸாக அமைந்திருக்கிறது.
வனத்தை மையமாக வைத்து திகில், பேண்டஸி, பீரியட் என திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ கண்டன் ஆனந்த்
கதைக்குப் பொருத்தமான ஒரு தலைப்பு. இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த்.
காடுகளின் முக்கியத்துவத்தை சிறப்பாக உணர்த்தி கூடவே மறுபிறவி, பழி வாங்கல் என பரபரப்பான த்ரில்லராகவும் கொடுத்திருக்கிறார்.
இடைவேளைக்குப் பிறகு படத்தில் பல இடங்களில் டுவிஸ்ட்
ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது.
வனத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரு காரணத்திற்காக தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் காட்சி உருக்கம். இயக்குநர் ஸ்ரீ கண்டன் ஆனந்த்
ஒளிப்பதிவாளருக்கு அதிக வேலை.
தன் மீதான பொறுப்பை உணர்ந்து படத்தை ஒரு விஷுவல் ட்ரீட்டாகக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன்.
பிளாஷ் பேக் காட்சிகளில் அந்த மலையின் அழகை அற்புதமாய் பதிவு செய்திருக்கிறார்.
நாமே நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. கல்லூரி ஹாஸ்டல் சம்பந்தப்பட்ட இரவு நேரக் காட்சிகளில் தன் லைட்டிங் மூலம் பரபரப்பைக் கூட்டுகிறார்
விக்ரம் மோகனின் ஒளிப்பதிவும் படத்தில் ஒன்ற வைக்கிறது.
ரான் ஈத்தன் இசையும் பின்னணி இசையும் திரைப்படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.
மொத்தத்தில் வனம் திரைப்படம் திகில் குறைவு.











