Thursday, December 9
Shadow

மாநாடு திரை விமர்சனம் ரேட்டிங் –3.75 /5.

நடிகர் நடிகைகள் – சிலம்பரசன் டி ஆர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், உதயா, கருணாகரன், சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், எஸ் ஏ சந்திரசேகர், ஒய் ஜி மகேந்திரன், கல்யாணி பிரியதர்ஷன், அரவிந்த் ஆகாஷ், பஞ்சு சுப்பு, டேனியல்,
மற்றும் பலர்.

தயாரிப்பு – வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்.

இயக்கம் –  வெங்கட் பிரபு.

ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம் நாதன்.

படத்தொகுப்பு – பிரவீன் கே எல்.

இசை – யுவன் சங்கர் ராஜா.

திரைப்படம் வெளியான தேதி –25 நவம்பர் 2021

ரேட்டிங் –3.75 /5

 

 

தமிழ் திரைப்பட உலகில் டைம் லூப் என்ற புதிய கதைக்களத்துடன் நவம்பர் 19 தேதி வெளியான ஜாங்கோ திரைப்படம் வெளியானது.

அதாவது ஒரு நாள் தனக்கு நடந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நடப்பதே டைம் லூப்.

இந்த வாரம் அதே டைம் லூப் கதைக்களத்துடன் இந்த சிலம்பரசன் டி ஆர் நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

இரண்டு திரைப்படத்திற்கும்  எந்த ஒரு பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

அந்த ஜாங்கோ திரைப்படத்தில் தனது மனைவியை யாரோ கொல்வதை, டைம் லூப்பில் சிக்கியுள்ள கணவர் காப்பாற்ற முயற்சிக்கிறார்.

இந்த மாநாடு திரைப்படத்தில் மாநிலத்தின் முதல்வரை யாரோ கொல்வதை டைம் லூப்பில் சிக்கியுள்ள சிலம்பரசன் டி ஆர் காப்பாற்ற முயற்சிக்கிறார்

டைம் லுப்பில் சிக்கி கொள்ளும் சிலம்பரசன் டி ஆர் எப்படி தன்னையும் தன் சார்ந்தோரையும் காப்பாற்றுகிறார்.

துபாயில் பணியாற்றும் கதாநாயகன் சிலம்பரசன் டிஆர், தனது நண்பனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக துபாயில் இருந்து கோயம்புத்தூருக்கு வருகிறார்.

கதாநாயகன் சிலம்பரசன் டிஆர் விமானத்தில் வரும் போது டைம் லூப்பில் சிக்கிக் கொள்கிறார்.

ஊட்டியில் நடக்கும் திருமணத்திற்கு செல்கிறார் சிலம்பரசன் டி ஆர் திருமணம் செய்யப்போகும் மணப்பெண்ணை கடத்தி அவளை காதலிக்கும் தனது நண்பன் பிரேம்ஜியுடன் சேர்த்து வைக்க திட்டம் போடுகிறார்

திட்டமிட்டபடி திருமணத்தில் உள்ள மணப்பெண்ணை கடத்தி செல்லும் வழியில் ஒரு விபத்து ஏற்படுகிறது.

இந்த விபத்து மூலம் போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே. சூர்யாவிடம் சிலம்பரசன் டி ஆர் மற்றும் நண்பர்கள் மாட்டிக் கொள்கிறார்கள்.

நண்பர்களை பணைய கைதியாக வைத்து முதலமைச்சரை கொலை செய்ய சொல்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

நண்பர்களை காப்பாற்ற வேறு வழியில்லாமல் முதலமைச்சரை சுட்டு கொல்கிறார் சிம்பு. அதன்பின், போலீஸ் கதாநாயகன் சிலம்பரசன் டி ஆரை கொன்று விடுகிறது.

விழித்து பார்த்தால் கதாநாயகன் சிலம்பரசன் டி ஆர் மீண்டும் விமானத்தில் பயணிக்கிறார்.

Read Also  பேச்சுலர் திரை விமர்சனம் ரேட்டிங் –3.5 /5

இந்த நிகழ்வு மீண்டும் நடக்கிறது.

அப்போது, டைம் லூப்பில் தான் சிக்கி இருப்பதை கதாநாயகன் சிலம்பரசன் டி ஆர் உணர்கிறார்.

இதையடுத்து இதிலிருந்து விடுபட கதாநாயகன் சிலம்பரசன் டி ஆர் முயற்சி செய்கிறார்.

இறுதியில் டைம் லூப்பில் இருந்து சிலம்பரசன் டி ஆர் விடுபட்டாரா? இல்லையா ?தானும் தப்பித்து முதலமைச்சரையும் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் திரைப்படத்தின் மீதிக்கதை

முதல்முறையாக வழக்கமான கதைகள் கதாபாத்திரங்களிலிருந்து விலகி ஒரு புதிய கதைக்களத்துடன் கதாபாத்திரத்திலும் புதிய தோற்றத்தில் அருமையாக நடித்திருக்கிறார் சிலம்பரசன் டி ஆர்.

சிலம்பரசன் டிஆர் அப்துல் காலிக் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதாநாயகன் சிலம்பரசன் டி ஆர் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

கதாநாயகன் சிலம்பரசன் டி ஆர் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

கதாநாயகன் சிலம்பரசன் டி ஆருக்கு இந்த மாநாடு திரைப்படம் ஒரு கம்பேக் எனக் கூறலாம்.

சிலம்பரசன் டி ஆர் நடிப்பில் தாறுமாறாக புகுந்து விளையாடி இருக்கிறார்.

இந்த மாநாடு திரைப்படத்தில் சொல்வது போல பக்கா எனர்ஜியுடன் திரும்ப வந்துவிட்டார் சிலம்பரசன் டி ஆர்.

சிலம்பரசன் டிஆரின் நடிப்பு, வசனம், சண்டை காட்சிகள் என அனைத்திலும் தூள் கிளப்பியுள்ளார்.

இந்த மாநாடு திரைப்படம் சிலம்பரசன் டிஆருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கதாநாயகன் சிலம்பரசன் டி ஆருடன் போட்டி போட்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.

கதாநாயகன் சிலம்பரசன் டி ஆர், எஸ் ஜே சூர்யா இருவருக்கும் இடையே நடக்கும் காட்சிகள் தான் அதிகம்.

இருவருக்கும் மாநாடு பெயர் சொல்லும் அளவிற்கு அமைந்திருக்கிறது.

ஒரு கட்டத்தில் திரைப்படத்தின் சிலம்பரசன் டிஆரா அல்லது எஸ் ஜே சூர்யாவா என ஆச்சரியப்பட வைக்கிறார் எஸ்ஜே சூர்யா.

எத்தனை விதமான மாடுலேஷன், எத்தனை விதமான முகபாவங்கள் என காட்சிக்குக் காட்சி அசத்தியிருக்கிறார் எஸ்ஜே சூர்யா.

குறிப்பாக “வந்தான், சுட்டான், போனான், ரிப்பீட்டு” என்று அவர் பேசும் வசனங்கள் ரசிக்க முடிகிறது.

இந்த மாநாடு திரைப்படத்தின் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் சிலம்பரசன் டிஆருக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் படம் முழுவதும் இவர் வருவது போன்ற காட்சி அமைப்புகள் கிடைக்கும் கேப்பில் ஸ்கோர் செய்ய முயற்சிக்கிறார் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன்

கதாநாயகியாக வரும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு பெரிய வேலையில்லை.

கதாநாயகியாக வரும் கல்யாணி பிரியதர்ஷன் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்

இவர்கள் தவிர ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ், உதயா, வாகை சந்திரசேகர் கருணாகரன் டேனியல் பஞ்சு சுப்பு அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

Read Also  உடன்பிறப்பே திரை விமர்சனம். ரேட்டிங் –3.75 /5

இது இயக்குநர் வெங்கட் பிரபுவின் அரசியல் என திரைப்படத்தின் டைட்டிலிலேயே போட்டு அதை நிரூபித்துவிட்டார்.

போகிற போக்கில் அரசியலையும் லேசாக தொட்டு சென்றுள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு.

கதைக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்கள் மிகச் சரியாக தேர்வு செய்திருக்கிறார்.

குழப்பம் இல்லாத திரைக்கதை என கைத்தட்டல் பெற்றிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

ரொம்பவும் சிக்கலான, ஒரு சவாலான கதைக்களத்தை எடுத்துக்கொண்டு இயக்குநர் வெங்கட் பிரபு, அதை புரியும் வகையில் படமாக்கியிருப்பது மிகவும் சிறப்பு.

இது டைம் லூப் திரைப்படம் என்பதால் திரைப்படத்தின் காட்சிகள் திரும்ப திரும்ப வரும்.

ஆனால் அதை சரியாக கையாண்டு இருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு.

எடிட்டர் கே.எல்.பிரவீனுக்குத்தான் திரைப்படத்தில் அதிக வேலை.

திரைப்படத்தைப் பார்ப்பவர்கள் எந்தக் குழப்பமும் இல்லாமல் பார்க்க வேண்டும் என அவ்வளவு கவனத்துடன் எடிட் செய்திருக்கிறார்.

திரைப்படத்திற்கு பெரிய பலம் கே.எல்.பிரவீனின் படத்தொகுப்பு.

தெளிவான திரைக்கதைக்கு பெரிதும் உதவி இருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல் தாளம் போட வைக்கிறது.

இவரின் பின்னணி இசையை விட்டு நமது மனதை விட்டு பிரிய வழியில்லை.

அந்த அளவிற்கு அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

சமீப காலத்தில் வந்த திரைப்படங்களில் பின்னணி இசைக்கென இவ்வளவு காட்சிகளை வைத்து எந்த ஒரு திரைப்படங்களும் வந்ததில்லை என்று சொல்லலாம்.

அந்த அளவிற்கு யுவன் ஸ்கோர் செய்ய பல காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு கிளாஸ் ரகம்.

குறிப்பாக மாநாடு அரங்க காட்சிகளை அவ்வளவு யதார்த்தமாய் படமாக்கியிருக்கிறார்.

ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது

தீவிரவாதிகளில் ஏதுடா சாதி மதம் எல்லாம் என சிலம்பரசன் டிஆர் பேசும் வசனங்கள் மிக மிக அருமை.

அனல் தெறிக்கும் சண்டைக்காட்சிகள் செம அருமையாக சண்டைக்காட்சி அமைத்துத் தந்திருக்கிறார் ஸ்டண்ட் சில்வா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வித்தியாசமான த்ரில்லர் மாநாடு திரைப்படத்தை பார்த்த திருப்தியில் ரசிகர்கள் திரையரங்குகளை விட்டு வெளியில் வருகிறார்கள்.

இந்த மாநாடு திரைப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து பல மாதங்கள் காத்திருந்து திரையரங்குகளில் வெளியிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

இந்த மாநாடு நிச்சயம் திரையரங்கலுக்கான ஒரு திரைப்படம் தான்.

மொத்தத்தில் இந்த ‘மாநாடு’ திரைப்படம் பல விதமான தடைகளை தாண்டி வெற்றி பெற்றுள்ளது.

CLOSE
CLOSE