வன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள். பாஜக.-வை தாக்கிய பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தன் போயஸ் தோட்ட கார்டன் முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதில்…

டெல்லியில் ஏற்பட்ட கலவரத்திற்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம்.

ட்ரம்ப் போன்ற தலைவர்கள் வரும்நேரத்தில் மத்திய அரசு போராட்டத்தை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் மத்திய அரசின் intelligence-ன் தோல்வி.. இதற்காக மத்திய அரசை கண்டிக்கிறேன்.

அமைதி வழியில் போராட்டம் நடத்தலாம், வன்முறைக்கு இடம் கொடுக்கக்கூடாது; போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும்.

மதத்தை வைத்து அரசியல் செய்வதையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

போராட்டம் எப்போதும் வன்முறையாக மாறக் கூடாது, அமைதியாக நடைபெறலாம்.

டெல்லியில் வன்முறையை ஒடுக்க முடியாவிட்டால், ராஜினாமா செய்யுங்கள்.

சிஏஏ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாகிவிட்டது.

குடியுரிமைச் சட்டத்தை இனி திரும்ப பெறுவது சாத்தியமில்லை.

சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல்ஆளாக நிற்பேன் என்றுதான் கூறினேன்.

என்ன உண்மையோ அதை சொல்கிறேன்; என் பின்னால் பாஜக இருப்பதாக கூறுவது வருத்தமளிக்கிறது.

நான் பாஜகவின் ஊதுகுழல் என மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் கூறுவது வேதனை அளிக்கிறது

இவ்வாறு சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.