வித்தியாசமான முறையில் கொரோனா நிதி வழங்கிய தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா.

இவர் கொரோனா நிவாரண நிதியாக வித்தியாசமான ஒரு விஷயத்தை அறிவித்துள்ளார்.

கொரோனா நிவாரணத்திற்காக 1.3 கோடி ருபாய் அளித்துள்ளார்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு நிதியுதவி அளித்திருப்பதாக கூறினார்.

மேலும் இந்த கொரோனா பிரச்சனையை சமாளிக்க தான் பண ரீதியாக தயார் நிலையில் இல்லை என குறிப்பிட்ட அவர், தனது தயாரிப்பு நிறுவனத்தின் 30 பணியாளர்களுக்கு தொடர்ந்து சம்பளம் தர வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இவருடைய அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ள வெப்சைட்டில் ஏழைகள், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், ஊருக்கு செல்ல முடியாத வெளியூர் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பதிவு செய்ய வேண்டும்.

அவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் நிதி வழங்கப்படும் என்று தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது..

விஜய் தேவரகொண்டா அறக்கட்டளையில் மொத்தம் 35 பேர் பணிபுரிகின்றனர். தற்போது என்னிடம் எந்த நிதியும் இல்லை. நான் இப்போது இரண்டு விஷயங்களை கையில் எடுத்துள்ளேன். உடனடி தேவைகள், எதிர்கால தேவைகள்.

ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இந்த பிரச்சினையை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்.

கடந்த ஆண்டு நான் ஒரு ரகசிய திட்டத்தை தொடங்கினேன். அதன் மூலம் 650 பேரை நேர்காணல் செய்து அதிலிருந்து 50 பேரை இறுதி செய்தோம்.

அவர்கள் அனைவருக்கும் பயிற்சி கொடுத்து அதிலிருந்து 2 பேரை ஏற்கெனவே தேர்வு செய்து விட்டோம். மீதமுள்ள 48 பேரும் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள். வேலை வாய்ப்புக்காக ரூ. 1 கோடி வழங்குகிறேன்.

இன்னும் அதிக மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பிடித்த துறையில் பயிற்சி வழங்கப்படும். வழங்கப்பட்ட மொத்த தொகையும் இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக பயன்படும். ‘ரவுடி’ மற்றும் ‘கிங் ஆஃப் தி ஹில்’ குழுமங்களின் மூலமும் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளோம்.

மக்களின் தற்போதைய உடனடி தேவைகளுக்காக ரூ.25 லட்சம் வழங்குகிறேன். ஆந்திரா மற்றும் தெலங்கானா முழுவதும் உள்ள 2000 ஏழை குடும்பங்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.

உடனடி உதவி தேவைப்படுபவர்கள் எங்கள் thedeverakondafoundation.org இணையதளத்தை பார்க்கவும். அதில் அனைத்து தகவல்களும் உள்ளன.

படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் என்னுடைய திரைப்படங்கள் அனைத்தும் பாதியில் நிற்கின்றன. தற்போது நான் வேலையின்றி இருக்கிறேன். தேவையுள்ளவர்களுக்கு உதவுதற்காக என் நண்பர்களிடம் பணம் கேட்டிருக்கிறேன்.

மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியதும் அவர்களுக்கு திரும்ப அந்த பணத்தை கொடுத்து விடுவேன்.

இவ்வாறு தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. கூறியுள்ளார்.

error: Content is protected !!