தமிழக அரசின் ஆதரவோடு இண்டோ சினி அப்ரிஷியேஷன் ஃபவுண்டேஷன் நடத்தும் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா.

சென்னை : 09 நவம்பர் 2020

சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒருங்கிணைப்புக் குழுவான இண்டோ சினி அப்ரிஷியேஷன் ஃபவுண்டேஷன் ( Indo Cine Appreciation Foundation) தரப்பில் அனைத்து ஊடகங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த திரைபட விழாவின் போது உங்களின் மிகச்சிறந்த ஆதரவுக்காக எங்களது நன்றியை உரித்தாக்குகிறோம்.

இந்த முறை உலகமே கரோனா பெருந்தொற்றால் சிக்கித் தவிப்பதால், 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவினை டிசம்பர் 2020-க்கு பதிலாக 2021 பிப்ரவரி 18 முதல் 25 வரை நடத்துவதாக முடிவுசெய்துள்ளோம்.

18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் வழக்கம்போல்,

1. உலக சினிமா
2. தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டி
3. இந்தியன் பனோரமா
4. ரெட்ரோஸ்பெக்டிவ்
5. கன்ட்ரி ஃபோகஸ்

என அனைத்து அம்சங்களும் இடம்பெறும்

தங்களின் தொடர்ச்சியான நல் ஆதரவுக்கு மீண்டும் எங்களின் நன்றியைத் தெர்வித்துக் கொள்கிறோம். தங்களின் ஊடகங்கள் வாயிலாக 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா குறித்த அறிவிப்பினை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறோம்.

நன்றி
வணக்கம்

E.தங்கராஜ்
பொது செயலாளர்
இண்டோ சினி அப்ரிஷியேஷன் ஃபவுண்டேஷன்