சிலம்பரசன் டிஆரின் மாநாடு திரைப்படத்தின் புதிய அறிவிப்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சென்னை 10 ஜூன் 2021
சிலம்பரசன் டிஆரின் மாநாடு திரைப்படத்தின் புதிய அறிவிப்பு ரசிகர்கள் உற்சாக மடைந்துள்ளனர்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிப்பில் உருவாகி வரும் மாநாடு திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் மாநாடு.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
இந்த மாநாடு திரைப்படத்தில் சிலம்பரசன் டிஆர் அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
சிலம்பரசன் டிஆருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.
இந்த மாநாடு திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த மாநாடு திரைப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
மாநாடு திரைப்படத்தின் முதல் பாடல் ரம்ஜான் பண்டிகையன்று வெளியிடப்படும் என அறிவித்திருந்த படக்குழுவினர்.
அந்த சமயத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு தாயார் காலமானதால், அப்பாடல் வெளியீடை தள்ளிவைத்தனர் படக்குழுவினர்.
இந்த நிலையில் முதல் பாடலை ஜூன் 21 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இது சிலம்பரசன் டிஆரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.











