பொங்கலுக்கு மோதிக் கொள்ளும் மாதவன்& விஷால் சிலம்பரசன் திரைப்படங்கள்!

சென்னை : 22 டிசம்பர் 2020

வரும் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாதவனின் மாறா திரைப்படமும் விஷாலின் சக்ரா திரைப்படமும் வெளியாக உள்ளன.

கொரோனாவுக்கு பிறகு திரைப்படம் வெளியீடுகளில் ஓடிடி தளங்கள் மிகப்பெரிய ஆதிக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

நிறைய திரைப்படங்கள் திரையரங்குகளில்  வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாக ஆரம்பித்துள்ளன.

அந்த வகையில் நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.

இதையடுத்து இப்போது வரிசையாக திரைப்படங்கள் ஓடிடி வெளி வர தயாராக உள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் மாதவன் நடித்துள்ள மாறா திரைப்படமும், நடிகர் விஷால் நடித்துள்ள சக்ரா திரைப்படமும் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளன.

திரையரங்குகளில் தளபதி நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் மற்றும் நடிகர் சிலம்பரசன் டி ஆர் ஈஸ்வரன் திரைப்படங்கள் போட்டியிட உள்ள நிலையில் ஓடிடியிலும் பல படங்கள் வெளியாக உள்ளன.

CLOSE
CLOSE
error: Content is protected !!