பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் திரைப்படங்கள் மோதல் ⁉*
கடந்த பொங்கல் அன்று ரஜினிகாந்தின் ‘பேட்ட’ மற்றும் அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்களும், கடந்த தீபாவளி அன்று விஜய்யின் ‘பிகில்’ மற்றும் கார்த்தியின் ‘கைதி’ ஆகிய திரைப்படங்களும் வெளியாகி வெற்றி பெற்றன. இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘பட்டாஸ்’ திரைப்படம் வரும் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.











