தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் மாண்புமிகு தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குநர் வி.செ. குகநாதன் வாழ்த்துகள்!

சென்னை 03 மே 2021

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் மாண்புமிகு தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குநர் வி.செ. குகநாதன் வாழ்த்துகள்!

தலைவர் ஸ்டாலின் அவர்களின் கடுமையான உழைப்பினால் பெறப்பட்ட இந்தத் தேர்தல் வெற்றியால் தமிழர்களின் சுயமரியாதை காப்பாற்றப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டின் தனித்துவம் மீட்கப்பட்டு இருக்கிறது.

கழகங்கள் இல்லாத தமிழகத்தை எந்தக் கொம்பனாலும் உருவாக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

‘வெற்றிடம்’ என்ற வார்த்தைக்கு தமிழகம் எப்போதும் இடம் தராது என்பது புரியவைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் அரசியல் மாற்றத்திற்கு தமிழகம் அடித்தளம் அமைத்து இருக்கிறது.

துக்ளக் கோமாளிகள் எல்லாம் சொன்ன மாற்றம் எங்கே நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் தமிழர்களே…

இயக்குநர் தயாரிப்பாளர் கதை ஆசிரியர்

வி.செ.குகநாதன்

error: Content is protected !!