தமிழக முதல்வருக்கு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து.

சென்னை 03 மே 2021

தமிழக முதல்வருக்கு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து.

தமிழ் நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிக்கும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 25 நாள் இடைவெளிக்கு பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று மே 2 ஆம் தேதி நடைபெற்றது.

தபால் வாக்கு எண்ணிக்கையில் இருந்தே திராவிட முன்னேற்ற கழகம் முன்னிலை வகித்தது.

இறுதியில் திராவிட முன்னேற்ற கழகம். கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று வெற்றி வாகை சூடியது.

திராவிட முன்னேற்ற கழகம். மட்டும் 126 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

இதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைக்க உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் கார்த்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் மு.க.ஸ்டாலின் அவர்கள், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம், கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து, மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள்”

என நடிகர் கார்த்திக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.