OTT-யில் வெளியாகும் நடிகர் தனுஷின் இரண்டு திரைப்படங்கள் – ரசிகர்கள் மிகுந்த உற்சாகம்.
சென்னை 07 மே 2021
ஓடிடி-யில் வெளியாகும் நடிகர் தனுஷின் இரண்டு திரைப்படங்கள் – ரசிகர்கள் மிகுந்த உற்சாகம்.
ஒரு மாத இடைவெளியில் நடிகர் தனுஷ் நடித்துள்ள இரண்டு திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம், கடந்த ஏப்ரல் 9-ந்தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், கர்ணன் திரைப்படம் இரண்டு வாரம் மட்டுமே திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இதனால் இந்த திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
அதன்படி இந்த கர்ணன் திரைப்படம் வருகிற மே 14-ந் தேதி ஓடிடி-யில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படமும் வருகிற ஜூன் மாதம் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளது.
சுமார் ஒரு மாத இடைவெளியில் நடிகர் தனுஷ் நடித்துள்ள இரண்டு படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதில் குறிப்பாக ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.











