நடிகர் இயக்குநர் பாக்யராஜ் மற்றும் அவருடைய மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா தொற்று உறுதி.
சென்னை 07 மே 2021
நடிகர் இயக்குநர் பாக்யராஜ் மற்றும் அவருடைய மனைவி
பூர்ணிமாவுக்கு கொரோனா தொற்று உறுதி.
நடிகர் பாக்யராஜ் மற்றும் அவருடைய மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார் நடிகர் சாந்தனு
கொரோனா வைரஸ் நோய் தொற்றின் இரண்டாவது அலையில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் என பல துறையினரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், தனது பெற்றோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சாந்தனு தனது ட்விட்டரில், ”எனது அப்பா பாக்யராஜ் மற்றும் எனது அம்மா பூர்ணிமா பாக்கியராஜ் இன்று கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால் மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி எனது பெற்றோரும் எங்கள் ஊழியர்களும் தனிமைப்படுத்திக்கொண்டனர்.
கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அனைவரும் விரைவில் நலம்பெற வேண்டிக்கொள்ளுங்கள்” என்று கோரிக்கையும், வைத்திருக்கிறார்.
https://twitter.com/imKBRshanthnu/status/1390537875033255939?s=19











