மனைவியின் உடலுக்கு நடிகர் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கவச உடை அணிந்தபடி வந்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னை 17 மே 2021
மனைவியின் உடலுக்கு நடிகர் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கவச உடை அணிந்தபடி வந்து அஞ்சலி செலுத்தினார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பால் உயிரிழந்த மனைவியின் உடலுக்கு நடிகர் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கவச உடை அணிந்தபடி வந்து அஞ்சலி செலுத்தினார்.
நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ்.
இவருடைய இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த திரைப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
இவர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆர்டிக்கிள் 15’ திரைப்படத்தின் தமிழில் மொழி மாற்றத்தை இயக்குகிறார் அருண்ராஜா காமராஜ்.
கொரோனா வைரஸ் நோய் தொற்றின் பாதிப்பு காரணமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட அருண்ராஜா காமராஜ் அவருடைய மனைவி சிந்துஜாவும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
நேற்று இரவு அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பால் உயிரிழந்த மனைவியின் உடலுக்கு நடிகர் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கவச உடை அணிந்தபடி வந்து அஞ்சலி செலுத்தினார்.
அவர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியதை பார்த்து அருகில் இருந்தவர்கள் மனமுடைந்து கண் கலங்கினர்.
இதேபோல் நடிகர்கள் நடிகர் உதயநிதி ஸ்டாலினும், சிவகார்த்திகேயன் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.