பலவிதமான எதிர்ப்புக்கு மத்தியில் தி ஃபேமிலி மேன் 2 திடீரென்று ரிலீசாகி இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னை 04 ஜூன் 2021

பலவிதமான எதிர்ப்புக்கு மத்தியில் தி ஃபேமிலி மேன் 2 திடீரென்று ரிலீசாகி இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தடை செய்யப்பட வேண்டும் பல விதமான எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி ஃபேமிலி மேன் 2 வெளியாகியிருக்கிறது மக்கள் பேரதிர்ச்சி.

தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் திடீரென்று ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி இருக்கும் வெப் தொடர் ‘தி ஃபேமிலி மேன் 2’. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இந்த தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக பலவிதமான கண்டனக் குரல்கள் எழுந்தது.

அதில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இந்த தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் தமிழக அரசும் இந்த தொடருக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இந்த சர்ச்சைகள் குறித்து நடிகை சமந்தா எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் இந்த வெப் தொடர் திடீரென்று OTT தளத்தில் ரிலீசாகி உள்ளது.

இந்த வெப் தொடரை தடை செய்ய வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில் திடீரென்று ரிலீசாகி இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

error: Content is protected !!