தளபதியின் மகன் சஞ்சய்் காரில் இசை கேட்டு கொண்டு ஜாலி மூடில் செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை 04 ஜூன் 2021

தளபதியின் மகன் சஞ்சய்் காரில் இசை கேட்டு கொண்டு ஜாலி மூடில் செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய்
காரில் இசை கேட்டு கொண்டு ஜாலி மூடில் செல்லும் வீடியோ ஒன்று தற்போது திடீரென சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், கடந்த 2009ம் ஆண்டு விஜய்யின் ‘வேட்டைக்காரன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ஓபனிங் பாடலான நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட பாடலுக்கு தனதுதந்தை விஜய்யுடன் சேர்ந்து நடனமாடினார்.

அதன்பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை.

தனது பள்ளிப்படிப்பை முடித்த பினபு சஞ்சய் தனது தந்தையை போலவே திரைப்பட துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக படிப்பை கனடாவில் படித்து முடித்துள்ளார்.

இதனால் விரைவில் நடிகர் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய்
தமிழ் திரைப்பட உலகில்் திரைப்படம் இயக்குவதிலோ அல்லது கதாநாயகனாகவோ தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தற்போது வரை தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் நடிக்க உள்ள படம் குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

ஏற்கனவே தளபதி விஜயின் மகன சஞ்சய்
ஜங்ஷன் ” என்கிற குறும்படத்தில் நடித்ததன் மூலம் சஞ்சய் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அதே போல் இவர் அடிக்கடி நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருவது நாம் அறிந்ததுதான்.

இந்த நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய்யின் 14 நொடி வீடியோ ஒன்று திடீரென சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சஞ்சய் காரில் சென்று கொண்டிருப்பது போன்றும், இசையை ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பது போன்றும் காட்சிகள் உள்ளன.

இரவில் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ நண்பர்களுடன் இரவு நேரத்தில் காரில் சென்றபோது இந்த வீடியோ எடுத்திருப்பதாக தெரிகிறது.

இந்த வீடியோவை தற்போது தளபதி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள அந்த வீடியோ இதோ…

https://twitter.com/IamJasonSanjay/status/1400063355650416647?s=19

 

error: Content is protected !!