நடிகை அனுஷ்காவின் பிறந்தநாளன்று அவரது 48-வது படத்தை அறிவித்தது யூவி கிரியேஷன்ஸ், பி மகேஷ் பாபு இயக்குகிறார்.

சென்னை 07 நவம்பர் 2021 நடிகை அனுஷ்காவின் பிறந்தநாளன்று அவரது 48-வது படத்தை அறிவித்தது யூவி கிரியேஷன்ஸ், பி மகேஷ் பாபு இயக்குகிறார்.

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாளான இன்று (நவம்பர் 7), சாஹோ, ராதே ஷியாம் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ் அனுஷ்காவுடனான தனது மூன்றாவது திரைப்படத்தை அறிவித்தது.

காணொலி ஒன்றின் வாயிலாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், ”2013-ம் ஆண்டு மிர்ச்சி திரைப்படத்தில் “அழகு ராணி”-யாக நமது உள்ளங்களை கொள்ளை கொண்டார் அனுஷ்கா.

2018-ல் பாகமதியில் “அச்சமில்லா அரசி”-யாக நம்மை ஆட்கொண்டார்.

தற்போது, “அரசி” அனுஷ்கா ஷெட்டியும் யூவி கிரியேஷன்ஸும் மூன்றாவது முறையாக இணைகின்றனர்.

அனுஷ்காவின் 48-வது (#Anushka48) படமான இந்த நவீன கால பொழுதுபோக்கு சித்திரத்தை மகேஷ் பாபு பி எழுதி இயக்குகிறார்.

படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஸ்வீட்டி (அனுஷ்காவின் செல்ல பெயர்),” என்று கூறியுள்ளது.

அனுஷ்காவின் பிறந்தநாளன்று செய்யப்பட்டுள்ள இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாடர்ன் மங்கையாக புதிய தோற்றத்தில் இப்படத்தில் அனுஷ்கா தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யூவி கிரியேஷன்ஸ், அனுஷ்கா கூட்டணியில் உருவான பாகமதி எவ்வாறு நான்கு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றதோ, அதே போல் இப்படத்தையும் நான்கு மொழிகளில் தயாரித்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், மகேஷ் பாபு பி இயக்கத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தின் தலைப்பு, இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையே, அனுஷ்காவின் பிறந்தநாளான இன்று திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!