சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார் அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்.!
சென்னை 28 செப்டம்பர் 2022 சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார் அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்.!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு தெலுங்கு திரைப்பட ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாடப்படுபவர்
பிரபல சூப்பர்ஸ்டார் நடிகர் கிருஷ்ணாவிற்கும் இந்திரா தேவி தம்பதியினரின் மகன்தான் நடிகர் மகேஷ் பாபு.
இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி இன்று காலை காலமானார் எனும் அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
இந்த செய்தி நடிகர் மகேஷ் பாபுவின் குடும்பம் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பலரும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.











