மகான் திரை விமர்சனம் ரேட்டிங் – 3.5 /5

நடிகர் நடிகைகள் – சியான் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த, முத்துகுமார், தீபக் பரமேஷ், பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், கஜராஜ், மற்றும் பலர்.
இயக்கம் – கார்த்திக் சுப்புராஜ்.
ஒளிப்பதிவு – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா.
படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன்.
இசை – சந்தோஷ் நாராயணன்.
தயாரிப்பு – 7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ்,
ரேட்டிங் – 3.5 /5
ஆக்ஷன் த்ரில்லர் ரசிகர்கள் மற்றும் ஆர்வமிகு திரைப்பட ரசிகர்களுக்கும் இனி அதிக நாட்கள் காத்திருக்க அவசியமில்லை.
ஏனென்றால் அமேசான் ப்ரைம் வீடியோ பிரபல ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடித்த ‘மகான்’ திரைப்படத்தை பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடுகிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் ‘மகான்’ திரைப்படம் கன்னடத்தில் ‘மஹா புருஷா’ என்ற பெயரில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுதும் இன்று பிப்ரவரி 10 வெளியாகியுள்ளது.
தமிழ் திரைப்பட உலகில் இன்று வெளியாகியிருக்கும் மற்றுமொரு வட சென்னை ரவுடியிசம் திரைப்படம். நமது இயக்குனர்கள் இன்னும் எத்தனை வட சென்னை ரவுடி கதைகளை ஒளித்து வைத்திருப்பார்களோ தெரியவில்லை.
ஜிகர்தண்டா, பேட்ட, ஜகமே தந்திரம்’ திரைப்பட வரிசையில் மீண்டும் ஒரு ‘ரா’வான ரக்குடனா திரைப்படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
ஆனாலும், ஒரு மிகவும் ஸ்டைலிஷான மேக்கிங், நடிகர்களின் ஈடுபாட்டான நடிப்பு ஆகியவற்றால் இந்த திரைப்படத்தைப் பார்க்க வைக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
‘இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு மது ஒழிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட பாரம்பரியம் மிக்க காந்தி வழியில் கதாநாயகன் விக்ரம் தந்தை ஆடுகளம் நரேன் வாழ்ந்து வருகிறார்கள்.
காந்தியக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வரும் அவர் தந்தை ஆடுகளம் நரேன் மகாத்மா காந்தி மீதுள்ள பற்றால் தனது மகன் கதாநாயகன் விக்ரமுக்கு காந்தி மகான் எனப் பெயர் வைக்கிறார்.
சிறுவயதிலேயே மது ஒழிப்பு, அகிம்சை போராட்டம் உள்ளிட்ட காந்தியக் கொள்கைகளை கதாநாயகன் விக்ரம் தந்தையால் சொல்லி கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்.
எந்தவிதமான ஆசையையும் அனுபவிக்காமல் அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் கதாநாயகன் விக்ரம்.
காந்தியக் கொள்கைகளை கொண்ட சிம்ரனுக்கும் திருமணம் நடந்து குழந்தை பிறக்கிறது.
ஒரு நாள் இவர்கள் வெளியூருக்கு செல்லும் போது, கதாநாயகன் விக்ரம்
கதாநாயகன் விக்ரம் தனது 40வது பிறந்தநாளை தனது விருப்பப்படி ஒரு நாள் தனக்கு பிடித்த மாதிரி வாழ வேண்டும் என நினைக்கிறார்.
என நினைக்க அதனால் ஏற்படும் சண்டையில் மனைவி சிம்ரன் மகனை அழைத்துக் கொண்டு கதாநாயகன் விகரமை விட்டு பிரிந்து செல்கிறார்.
தனது சிறு வயது நண்பன் சாராயக் கடை முதலாளி பாபி சிம்ஹா மற்றும் அவரது மகன் சனந்த் இருவரையும் சந்திக்கிறார் கதாநாயகன் விக்ரம்.
கதாநாயகன் விக்ரமின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடுகிறது.
சாராயக் கடை முதலாளி பாபி சிம்ஹாவுடன் சேர்ந்து சாராயக் கடை நடத்தும் தொழிலில்
பங்குதாரராக ஆகிறார் கதாநாயகன் விக்ரம்.
இருவரும் சேர்ந்து சாராய கடை நடத்தியும் தயாரித்தும் மிகப்பெரிய தொழிலதிபர்களாக மாறு விடுகிறார்கள்.
இருவர்கள இருவருடைய கூட்டணியும் சாராய தொழில் மிக பெரிய சாராய சாம்ராஜ்யமாக உருவாகிறது.
கதாநாயகன் விக்ரம் அவருடைய நண்பர் பாபி சிம்ஹா வாழ்க்கையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு
இவர்கள் இருவருடைய கூட்டணியை உடைக்க பல வருடங்களுக்குப் பிறகு கதாநாயகன் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம்
தாதா என்னும் ஒரு சிறப்பு காவல்துறை அதிகாரியாக
வடிவில் பல சிக்கல்கள் வருகிறது.
இதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்? அந்த போலீஸ் அதிகாரியை எப்படி சமாளிக்கிறார்கள்?
அப்பாவுக்கும் மகனுக்கும் நடக்கும் போராட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் இந்த மகான் திரைப்படத்தின் மீதிக் கதை.
மகான் திரைப்படத்தில்
வழக்கம்போல் தன்னுடைய பாணியில் நடித்திருக்கிறார் கதாநாயகன் விக்ரம்.
எந்த குறையும் இல்லாமல் அவருடைய நடிப்பு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
காலத்திற்கு ஏற்றவாறு திரைப்படத்திற்கு திரைப்படம் நடிப்பை வெளிபடுத்தும் விதம் மிகவும் அருமையாக இருக்கிறது.
இவருடைய நடிப்பு திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
மொத்த மகான் திரைப்படத்தையும் கதாநாயகன் விக்ரம்தான் தாங்கி நிற்கிறார்.
அதே சமயம் தன்கூட நடிக்கும் மற்ற நடிகர்களும் சரியான முக்கியத்துவம் தருவதிலும் தனித்து நிற்கிறார் கதாநாயகன் விக்ரம்.
திரைப்படத்தில் பல வித கெட்டப்புகளில் வருகிறார் கதாநாயகன் விக்ரம்.
சில தோற்றங்கள் ஹாலிவுட் நடிகர்களையும் ஞாபகப்படுத்துகிறார்.
தனது மகனுடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகளில், சண்டை போடும் காட்சிகளில் நிஜ தந்தை, மகன் சண்டை போடுகிறார்கள் என்றே தெரியாமல், அந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
இடைவேளை சமயத்தில் வந்தாலும் சரியாக ‘டப்’ கொடுக்கிறார் துருவ் விக்ரம்.
சில காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை நடிப்பின் மூலம் மிரட்டுகிறார்.
கதாநாயகன் விக்ரமிற்கு ஈடுகொடுக்கும் வகையில்
துருவ் விக்ரமின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது.
ஒரு சில காட்சிகளில் ரசிகர்களை நடிப்பின் மூலம் துருவ் விக்ரம் மிரட்டுகிறார்.
துருவ் விக்ரம் இவரும் ஒரு கதாநாயகன்தான்.
தந்தை 8 அடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய்வான் என்பது பழமொழி.
16 அடி பயந்தது போல் இல்லை 60 அடி பாய்ந்தது போல் இருக்கிறது துருவ் விக்ரம் நடிப்பு.
தனிகவனம் செலுத்தும் அளவிற்கு பாபி சிம்ஹாவின் நடிப்பு மிக அருமையாக அமைந்துள்ளது.
அவருடைய கதாப்பாத்திரத்தின் கெட்டப் மிகவும் கச்சிதம் இருக்கிறது.
இப்படியான கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிப்பதற்கே பாபி சிம்ஹாவிற்குப் பாராட்ட வேண்டும்.
இவர் மட்டுமா பாபி சிம்ஹாவின் மகனாக கதாபாத்திரத்தில் நடிக்கும் சனந்த், தனது பங்கிற்கு சில காட்சிகளில் தெறிக்க விடுகிறார்.
சிம்ரனுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை,
ஆரம்ப காட்சிகளிலும் கடைசியிலும் மட்டுமே வந்து போகிறார்.
அனைத்து கதாபாத்திரங்களும் அவரவர் வேலையை அவரவர் கரெக்டாக செய்திருக்கிறார்கள்.
இநத திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மிகவும் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
தன்னுடைய பணியை மிக அழகாக செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா.
கதையின் காட்சிகளை அவருக்கே உரித்தான வடிவமைப்பின் மூலம் காட்சிபடுத்தியிருக்கிறார்.
சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
குறிப்பாக சண்டை காட்சிகளில் இவருடைய இசை அதிக சுவாரசியத்தை கொடுத்து இருக்கிறது.
இநத திரைப்ப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மிகவும் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
பிளாஷ்பேக் காட்சிகள் போன்ற இடங்களில் இவருடைய இயக்குனர் பணி நல்லபடியாக அமைந்திருக்கிறது.
கதாபாத்திரங்களை உருவாக்கிய விதமும், அவர்களிடையே அனைத்து கதாபாத்திரங்களிடமும் வேலை வாங்கிய விதமும் அருமையாக உள்ளது.
திரைப்படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருந்தால்
அருமையாக இருந்திருக்கும்.
இநத மகான் திரைப்படம் முடிந்ததைப் பார்க்கும் போது மகான் – 2 கண்டிப்பாக வரும் என்றே கணிக்க முடிகிறது.
மொத்தத்தில் மகான் திரைப்படம் தந்தையை மிரளவைத்த மகன்.











