மாறன் திரை விமர்சனம் ரேட்டிங் 2.5 / 5

நடிகர் நடிகைகள்  – தனுஷ், அமீர், மாளவிகா மோகனன், ஸ்ம்ருதி வெங்கட், சமுத்திரகனி, கிருஷ்ண குமார், மாஸ்டர் மகேந்திரன், ஆடுகளம்’ நரேன், இளவரசு, ஜெயபிரகாஷ், ராம்கி, போஸ் வெங்கட், மற்றும் பலர்.

இயக்கம் – கார்த்திக் நரேன்.

ஒளிப்பதிவு – விவேக் ஆனந்த்..

படத்தொகுப்பு – ஜி.கே. பிரசன்னா.

இசை – ஜி.வி.பிரகாஷ் குமார்.

தயாரிப்பு – சத்யா ஜோதி பிலிம்ஸ்.

ரேட்டிங் – 2.5 / 5

துருவங்கள் பதினாறு’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் கார்த்திக் நரேன்.

துருவங்கள் பதினாறு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்.

துருவங்கள் பதினாறு, மாபியா, ஆகிய வித்தியாசமான திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் நரேன்தான்.

இந்த திரைப்படத்தை இயக்கினாரா என்பது ஆச்சரியமாக உள்ளது.

‘அசுரன்’ போன்ற நல்ல திரைப்படங்களில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் இந்த மாதிரியான திரைப்படங்களில் எப்படி நடிக்க சம்மதித்தார் என்பதும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

கதாநாயகன் தனுஷ் சிறு வயதிலேயே தாய் தந்தையை இழுந்து தனது தங்கை ஸ்ம்ருதி வெங்கட்டுடன் தாய் மாமா ஆடுகளம் நரேன் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார்..

கதாநாயகன் தனுஷின் தந்தை ராம்கி மிகவும் நேர்மையான பத்திரிக்கையாளராக இருப்பதால் எதிரியின் ரவுடி கும்பலால் படுகொலை செய்யப்படுகிறார்.

கதாநாயகன் தனுஷ் தனது தந்தையை போலவே மிகவும் நேர்மையான பத்திரிக்கையாளராக இருந்து வருகிறார்.

அரசியல்வாதியாக இருக்கும் சமுத்திரக்கனி செய்யும் சில தவறுகளை கண்டுபிடித்து பணிபுரியும் பத்திரிகையில் எழுதுகிறார்

இந்த நிலையில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சமுத்திரக்கனி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தவறு செய்யத் திட்டமிடும் தில்லு முல்லுகளை அம்பலப்படுத்துகிறார் கதாநாயகன் தனுஷ்.

இதனால் அதிக கோபம் அடைந்த சமுத்திரக்கனி கதாநாயகன் தனுஷை பழிவாங்க நினைக்கிறார்.

இந்நிலையில் கதாநாயகன் தனுஷின் தங்கை ஸ்ம்ருதி வெங்கட்டை யாரோ மர்ம நபர்கள் கடத்தி கொலை செய்து விடுகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் சமுத்திரக்கனிதான் கடத்தி கொலை செய்திருப்பார் என சந்தேகப் படுகிறார் கதாநாயகன் தனுஷ.

தனது தங்கையை கடத்தியவர்கள் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார்.

இறுதியில் கதாநாயகன் தனுஷின் தங்கையை கடத்தியவர்களை கண்டுபிடித்தாரா? இல்லையா? முன்னாள் அமைச்சர் வில்லன் சமுத்திரக்கனி கதாநாயகன் தனுஷை பழிவாங்கினாரா? இல்லையா? என்பதுதான் இந்த மாறன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த மாறன் திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

முதல் பாதியில் இளமை துள்ளலுடன் அருமையான நடிப்பையும், இரண்டாம் பாதியில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாதுவான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

Read Also  தனுசு ராசி நேயர்களே திரை விமர்சனம்

குறிப்பாக தனது தங்கை மீது உள்ள பாசத்தில் பளிச்சிடுகிறார்.

இந்த மாறன் திரைப்படத்தில் கதாநாயகியாக வரும் மாளவிகா மோகனன் மாடர்ன் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார்.

இந்தப் திரைப்படத்திலும் பெயருக்கு ஒரு கதாநாயகி என வந்து போகிறார்.

ஒரு காதல் காட்சி இல்லை, ஒரு டூயட் இல்லை.

தங்கையாக வரும் ஸ்ம்ருதி வெங்கட் துறுதுறு நடிப்பால் பளிச்சிடுகிறார்.

தமிழ் திரைப்பட உலகில் ஒரு தங்கை கதாபாத்திரம் என்னவெல்லாம் செய்யுமோ அனைத்தையும் செய்கிறார் ஸ்ம்ருதி வெங்கட்.

முன்னாள் அமைச்சராக வில்லன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி.

இந்த திரைப்படத்தில் ஒரு டிவிஸ்ட் வேண்டுமே, என்பதற்காக இயக்குனர் அமீரை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

சிறிது நேரமே வந்தாலும் படம் பார்க்கும் ரசிகர்களை கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் அமீர்.

கதாநாயகன் தனுஷ் வீட்டின் முன் 20 வருடங்களுக்கும் மேலாக இஸ்திரி கடை வைத்திருப்பவராக தாய்மாமன் வரும் ஆடுகளம் நரேன் கதாநாயகன் தனுஷின் தந்தையாக வரும் ராம்கி நடிப்பு அருமை.

கிருஷ்ண குமார், மாஸ்டர் மகேந்திரன், இளவரசு, ஜெயபிரகாஷ், போஸ் வெங்கட், ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

ஜி.வி. பிரகாஷ்குமாரின் இசையில் பொல்லாத உலகம் தாளம் போட வைக்கிறது பாடல் கேட்கும் ரகம்.

பின்னணி இசை திரைப் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

கதாநாயகன் தனுஷ் ஒரு பாடலை எழுதி பாட வேண்டும் என்பதற்காக ஒரு பாடலை வைக்க வேண்டும் என்பதற்காக வைத்திருக்கிறார்கள்

விவேக் ஆனந்த் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

ஜி.கே. பிரசன்னாவின் கட்டிங் ஒட்டிங் திரைப் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

பத்திரிக்கை துறையில் உள்ள
பத்திரிகையாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இநத திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன்.

அண்ணன், தங்கை பாசம் மற்றும் அப்பா, மகள் பாசம், திரில்லர் என கலந்து திரைக்கதை அமைத்து கொடுத்திருக்கிறார்.

ஆனால், திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் பயணிப்பது திரைப்படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘மாறன்’ திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடையே புதிதாக மாற்றம் வரவில்லை.