காரபன் திரை விமர்சனம் ரேட்டிங் –3.25 /5

நடிகர் நடிகைகள் – விதார்த், தான்யா பாலகிருஷ்ணன், மாரிமுத்து, மூணாறு ரமேஷ், மூர்த்தி, ராம்சன் வினோத் சாகர், டவுட் செந்தில், பேபி ஜானு பிரகாஷ் அஜய் நட்ராஜ், விக்ரம் ஜெகதீஷ், பவுலின், மற்றும் பலர்.

இயக்கம் – ஆர்.சீனுவாசன்.

ஒளிப்பதிவு – விவேகானந்த சந்தோஷ்.

படத்தொகுப்பு – பிரவீன் கே.எல்.

இசை – சாம் சி.எஸ்.

தயாரிப்பு – பெஞ்ச் மார்க் பிலிம்ஸ்.

ரேட்டிங் –3.25 /5

திரைப்பட உலகிற்கு ஒரு சாபக்கேடு உண்டு.

தாய் பாசம் கொண்ட ஒரு திரைப்படம் வந்து ஜெயித்து விட்டால் அதே போல் பல திரைப்படங்கள் அடுத்தடுத்து வரும்.

காமெடி திரைப்படமொன்று வந்து வெற்றி பெற்றால் அடுத்தடுத்து காமெடி திரைப்படங்களை வெளியாகும்.

அதேபோல் தான் ஹாரர் திரைப்படங்கள் வெற்றி பெற்றால் ஹாரர் அதிகமாக திரைப்படங்களை வெளியாகும்.

அப்படித்தான் மாதிரியான கதைகளில் டைம் லூப் – அதாவது கனவையும் நனவையும் வைத்து எடுக்கும் கதை அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் வந்த மாநாடு ஜங்கோ திரைப்படங்கள் போல் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கும் புதுமையான கதையுடன் வெளியாகி உள்ளது கார்பன் திரைப்படம்.

உண்மையில் அதைவிட புதுமையான திரைக்கதை, பல நேரங்களில் நாம் கணிக்க முடியாத பல விதமான திருப்பங்கள் கார்பன் திரைப்படத்தில் இருக்கிறது.

சிறிய பட்ஜெட்டில் இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்த இயக்குநரின் உழைப்புக்காகவே இந்த கார்பன் திரைப்படத்தைப்  பார்க்கலாம்.

கதாநாயகன் விதார்த் ஐடிஐ முடித்துவிட்டு காவல் துறையில் சேரவேண்டும் என்ற கனவோடு இருக்கிறார்.

கார்ப்ரேஷனில் குப்பை அள்ளும் லாரியின் டிரைவராக பணிபுரியும் கதாநாயகன் விதார்த்தின் தந்தை மாரிமுத்து.

கதாநாயகன் விதார்த் வேலைக்கு செல்லாமல் ஊர்ச் சுற்றி திரிந்து வருவதால் தந்தை மாரிமுத்து அவரிடம் தண்டச் சோறு என்று கோபித்துக் கொண்டதால் வேலைக்கு போய் முதல் மாசம் சம்பளத்துடன் வந்துதான் பேசுவேன் என்று வீராப்புடன் இருக்கிறார் கதாநாயகன் விதார்த்.

இதனிடையே கதாநாயகன் விதார்த்துக்கு கனவில் வருகிற விஷயங்கள் நிஜத்தில் நடந்து அவருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது

கதாநாயகன் விதார்த் வேலைக்கு சென்று முதல் மாத சம்பளம் வாங்கும் சமயத்தில் கனவில் அவரின் தந்தைக்கு விபத்து ஏற்படுவது போல் தோன்றுகிறது.

அதை தடுக்க முயற்சி செய்வதற்குள் அந்த விபத்து நடந்துவிடுகிறது.

தனது தந்தைக்கு நடந்தது விபத்தல்ல கொலை முயற்சி என்று புரிய இது ஏன் நடத்தப்பட்டது என்று தினம் தினம் கனவில் தேடி செல்கிறார்.

உண்மையில் இது கொலையா? இல்லை விபத்தா? இந்த கொலையை நிகழ்த்த காரணம் என்ன? கொலையாளிகளை கதாநாயகன் விதார்த் கண்டு பிடித்தாரா? இல்லையா ? என்பதுதான் இந்த கார்பன் திரைப்படத்தின் மீதிக்கதை

கதாநாயகனாக நடித்திருக்கும் விதார்த்திற்கு இது 25-வது திரைப்படம்.

இவருடைய 25வது படம் என்று பெருமையாக வெளியே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இந்த திரைப்படம் அவருக்கு அமைந்திருக்கிறது.

கதாநாயகன் விதார்த் மிகவும் அருமையாக எடுத்திருக்கிறார்.

எதார்த்த நடிப்பில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் தான்யா பாலகிருஷ்ணன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இவரின் நடிப்பு தனித்துவமாக இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

தனது பாணியில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து இந்த திரைப்படத்தில் அழகான தந்தையாக இடம் பெற்றிருக்கிறார்.

இவருடைய நடிப்பு திரைப்படத்திற்கு திரைப்படம் பேசப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஆர்.ஸ்ரீனிவாசன் இந்த கார்பன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

கதையும் திரைக்கதையும் எந்த இடத்திலும் இவர்  இயக்குனர் என்று தோன்றும் படி இல்லை.

திரைக்கதையை அழகாக கொண்டு சென்று இருக்கிறார்.

குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் இடம் பெறும் திருப்பங்கள் ரசிகர்களை கைத்தட்ட வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷ் சிறப்பான ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார்.

சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை திரைப்படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ”கார்பன்” திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தவன்.