வீரபாண்டியபுரம் திரை விமர்சனம் ரேட்டிங் – 2.5 /5

நடிகர் நடிகைகள்  – ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், அருள்தாஸ், ஹரிஷ் உத்தமன், சரத் ​​லோகிதாஸ் அஹான்ஷா சிங், பாலா சரவணன், ஜெயபிரகாஷ், முத்துக்குமார், காளி வெங்கட், பிச்சைக்காரன் மூர்த்தி, ஏஆர் ஜெய், சத்துரு,
மற்றும் பலர்.

இயக்கம் – சுசீந்திரன்.

ஒளிப்பதிவு – வேல்ராஜ்.

படத்தொகுப்பு – காசி விஸ்வநாதன்.

இசை – ஜெய்.

தயாரிப்பு – லென்டி ஸ்டுடியோ.

ரேட்டிங் – 2.5 /5

இந்த திரைப்படத்துக்கு ஏற்கனவே சிவ சிவா என பெயர் வைத்தார்கள்.

திரைப்படம் வெளி வருவதற்கு சில வருடங்கள் ஆனதால் இந்த வீராபாண்டியபுரம திரைப் படத்தை புது திரைப்படம் போல் கொண்டு வந்திருக்கிறார்கள்

அருவ, கத்தி, வெட்டு, குத்து, உதிரம், கொலை, பழி பழி வாங்குதல் சாதி பற்றிய என வந்துள்ள மற்றுமொரு கிராமத்துத் திரைப்படம்தான் வீராபாண்டியபுரம்.

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ஜீவா, உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி தமிழ் திரைப்பட உலகில் முத்திரை பதித்த இயக்குனர் சுசீந்திரன் அவ்வப்போது ராஜபாட்டை ஈஸ்வரன், வீராபாணிடியபுரம் இப்படி பட்ட திரைப்படங்களை எதற்குக் கொடுக்கிறார் என்ற கேள்வி திரைப்பட ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் உள்ள வீரபாண்டியபுரம் சேர்ந்த பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் இவருக்கும் கதாநாயகன் ஜெயிக்கும் காதல் ஏற்படுகிறது.

இந்த காதல் கதாநாயகன் மீனாட்சி கோவிந்தராஜன் பெற்றோர்கள் சம்மதமில்லாமல் திருமணம் வரை செல்கிறது.

தாலிகட்டும் கடைசி நேரத்தில் மனம் மாறுகிறார் கதாநாயகன் ஜெய்.

கதாநாயகன் ஜெய் கதாநாயகன் மீனாட்சி கோவிந்தராஜனின் தந்தை சரத் லேகிதாஸிடம் சென்று இருவரின் திருமணத்திற்காக சம்மதத்துடன் நடக்க வேண்டும் என்று கதாநாயகன் ஜெய் பேசுகிறார்.

நெய்க்காரப்பட்டி தலைவர் ஜெயபிரகாஷ் குடும்பத்திற்கும் சரத் லேகிதாஸ் இருவர் குடும்பத்திற்கும் பகை இருந்து வருகிறது.

அந்த இரண்டு கிராமங்களுக்கிடையே தீராத பகை இருந்து வருகிறது.

ஒருவர் மாற்றி மற்றொருவர் வெட்டிக் கொல்கிறார்கள்.

ஒரு கிராமத்தின் பெரிய மனிதரான ஜெயப்பிரகாஷின் மகளை மற்றொரு கிராமத்தின் பெரிய மனிதரான சரத் லோகிதாஸ் கொன்று விடுகிறார்.

தனது மகளை கொன்றவர்களை பழிக்கு பழி வாங்க சரத்லோகிதாஸையும் அவரது மூன்று தம்பிகளையும் கொல்லத் துடிக்கிறார் ஜெயப்பிரகாஷ்.

இரண்டு குடும்பத்துக்கும் உள்ள பகை என்ன?

இதற்கும் கதாநாயகன் ஜெய்க்கும் என்ன சம்பந்தம்?

இறுதியில் கதாநாயகன் ஜெயிக்கும் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜனுக்கும் நின்று போன திருமணம் நடந்ததா? நடக்கவில்லையா? என்பதுதான் இந்த வீராபாண்டியபுரம
திரைப்படத்தின் மீதிக்கதை.

இநத வீராபாண்டியபுரம திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெய் நடித்திருக்கிறார்.

சிவா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெய் மிக அமைதியான கிராமத்து இளைஞராக நடித்துள்ளார்.

சண்டை காட்சிகளில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.

கதாநாயகன் ஜெய்யின் தோற்றம் சுப்ரமணியபுரம் திரைப்படத்தை நியாபகப்படுத்துகிறது.

மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ஜெய் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம்.

இந்த வீராபாண்டியபுரம
திரைப்படத்தில் இசையமைப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார் ஜெய்.

அவருடைய நடிப்பு, வழக்கம் போல, கொஞ்சம் அப்பாவித்தனமான முகத்துடன் முத்திரை பதிக்க முயன்றிருக்கிறார்.

கதாநாயகன் ஜெய்யின் காதலியாக கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன்.

திரைப்படத்தில் பெரிய வேலையில்லை கல்யாணத்தின் போதும், காதலன் ஜெய்யிடம், தனது தந்தையை கொன்றது ஏன் என்று கேள்வி கேட்கும் போதும் கொஞ்சம் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜ் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

மற்றொரு நாயகியாக வரும் அகன்ஷா சிங் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

இரண்டு கதாநாயகிகளுக்கும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

கதாநாயகன் ஜெய்யின் திடீர் நண்பனாக பாலசரவணன், சிரிக்க வைக்க முயன்று தோற்றுப் போகிறார்.

நகைச்சுவை காட்சிகளில் சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார் பாலசரவணன்.

ஒரு சில காட்சிகள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் இருக்கிறது.

ஜெய்பிரகாஷ் அருவாவை தூக்கிக் கொண்டு அடுத்தவர்களை வெட்டப் போகிறார் என்று பார்ப்பதெல்லாம் கதாப்பாத்திரத்தில் பொருந்தவில்லை.

ஹரீஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

வில்லனாக சரத் லோகிதாஸ், கொஞ்சம் உருட்டல், மிரட்டல் என வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார்.

அவரது மூன்று தம்பிகளுமே அண்ணன் சொன்ன உடனே, கையில் கத்தியுடன் யாரையாவது கொல்ல வேண்டும் என ரத்த வெறி பிடித்து அலைகிறார்கள்.

இந்த வீராபாண்டியபுரம
திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கி இருக்கும் ஜெய்க்கு பாராட்டுகள்.

ஆனால், இவரது இசையில் பாடல்கள் பெரியதாக கவரவில்லை.

இசையமைப்பாளராக ஒரு பாடலை மட்டும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

அஜிஸின் பின்னணி இசை படத்திற்கு பலம்.

திண்டுக்கல் சுற்றுவட்டார கிராம அழகை தனக்கே உரிய பாணியில் காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.

தன் இயக்கும் திரைப்பட எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்டிவிட வேண்டும் என மட்டும் உழைத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

தமிழ் திரைப்பட உலகில் ஏற்கனவே பலமுறை பார்த்த பழிவாங்கும் கதையை தூசி தட்டி கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

மெதுவாக செல்லும் திரைக்கதை திரைப்படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘வீரபாண்டியபுரம்’ திரைப்படம் வீரமே இல்லாத பாண்டிபுரம்.

error: Content is protected !!