மீண்டும் திரை விமர்சனம் ரேட்டிங் –2.5 /5.

நடிகர் நடிகைகள் – கதிரவன், சரவணசுப்பையா துரை சுதாகர், டைரக்டர் யார் கண்ணன், டைரக்டர் ஏஸ்.எஸ. ஸ்டான்லி, டைரக்டர் கேபிள் சங்கர், ஆதர்ஷ், அனகா, சுப பாண்டியன், அனுராதா, அபிதா செட்டி, தாரணி, இந்துமதி மணிகண்டன், மோனிஷா, மற்றும் பலர்.

இயக்கம் – சரவண சுப்பையா.

ஒளிப்பதிவு – ஸ்ரீநிவாஸ் தேவம்சம்.

படத்தொகுப்பு – ராஜாமுகமது.

இசை – நரேன் பாலகுமார்.

தயாரிப்பு – ஹீரோ சினிமாஸ்.

ரேட்டிங் –2.5 /5

தல அஜித்குமார் நடித்த சிட்டிசன் திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார் இயக்குனர் ஷரவண சுப்பையா.

அதன் பிறகு ஷாம் சினேகா நடிப்பில் ABCD திரைப்படத்தை இயக்கினார்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த ‘மீண்டும்’
திரைப்படத்தை இயக்கியிருப்பதன் மூலம் மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறார் இயக்குனர் ஷரவண சுப்பையா.

சிட்டிசன் திரைப்படம் மூலம் தமிழில் ஒரு பரபரப்பைக் கிளப்பிய இயக்குனர் ஷரவண சுப்பையா.

அதைப்போல் இந்த மீண்டும் திரைப்படத்திலும் ஒரு பரபரப்புடன் மீண்டும் இயக்குனர் ஷரவண சுப்பையா. வந்திருக்கிறார்

ஒரு மனைவி இரண்டு கணவன் ஒரு மகன் இரண்டு தந்தை’ என்ற வாசகம்தான் அந்த ப்பரபரப்பு ஏற்படக் காரணம்.

இந்த மீண்டும் திரைப்படமும் ஏதோ பிரச்சினையை சொல்லப்போகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

கதாநாயகன் கதிரவன் திரைப்படம் ஆரம்பம் காட்சியிலேயே நிர்வாணமாக ஒரு சித்திரவதைக் கூடத்துக்குள் அடைபட்டிருக்க நிகழ் காலத்தில் துவங்கும் கதை, கடந்த கால பிளேஷ் பேக்காக விரிகிறது.

கதாநாயகன் கதிரவன் தனியாக தனது ஐந்து வயது மகனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மறுப்பக்கம் கதாநாயகி  அனகா, ஷரவண சுப்பையாவின் மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவருக்கு இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதும் நமக்குச் சொல்லப்படுகிறது

ஒரு கட்டத்தில் கதாநாயகன் கதிரவனைச் சந்திக்க போது கதாநாயகி அனகா, பதைபதைப்புடன் அவரைப் பற்றியும், அவர் மகனைப் பற்றியும் அறிய ஆவல் கொள்கிறார்.

அதற்கு அவர் கணவர் ஷரவண சுப்பையா உடன்படுவதும் நிகழ, அதற்குப்பின்தான் கதாநாயகி அனகா ஏற்கனவே கதாநாயகன் கதிரவனை திருமணம் செய்தவர் எனத் தெரிகிறது

அப்படியானால அந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது கணவன் உயிருடன் இருக்க ஏன் ஷரவண சுப்பையாவை கதாநாயகி அனகா இன்னொரு திருமணம் செய்தார் என தெரியவில்லை.

இரண்டு கணவன்மார்களும் உயிருடன் இருக்க, கதாநாயகி அனகாவின் முடிவு என்ன என்கிற சிக்கலான கதைக் களம்தான்

கதாநாயகி கதிரவன் கணவர் ஷரவண சுப்பையா
கதாநாயகி அனகா
யாருடன் சேர்ந்தார் என்பதுதான்
இந்த மீண்டும் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த மீண்டும் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

கதாநாயகன் கதிரவன்
வருமான வரித் துறையில் ரகசிய புலானாய்வு பிரிவில் அதிகாரியாக மிக அருமையாக நடித்து இருக்கிறார்

கதாநாயகன் கதிரவன் கதாபாத்திரத்தோடு ஒன்றிப்போய் இருக்கிறார்.

தந்தையாக ஒரு பக்கம் பிள்ளை மீது பாசம் பொழிவதாகட்டும், நாட்டை சீரழிக்க திட்டமிடும் தேசதுரோகிகளை ஒழிக்க ஆவேசப்படுவதாகட்டும் அற்புதமான நடிப்பால்  மிரள வைக்கிறார்.

ஆக்‌ஷன் காட்சிகளில் எந்த கதாநாயகனும் செய்யத் துணியாத காட்சியில் கதாநாயகன் கதிரவன் நடித்திருக்கிறார்.

ஏற்கனவே நட்பே துணை, டிக்கிலோனா திரைப்படங்களில் நமக்கு அறிமுகமாக அனகா, இந்த மீண்டும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

கதாநாயகன் கதிரவனுடனான காதல் காட்சியில் அத்தனை அழகாகத் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாகரீக உடைகளில் வந்தாலும் ஒரு தாயின் உள்ளத்தையும் அற்புதமாக வெளிக்காட்டி நெகிழ வைக்கிறார்.

கதாநாயகி அனகாவின் இரண்டாவது கதாநாயகனாக கதாநாயகி அனகாவின் இரண்டாவது கணவராகவும் மிக அருமையாக மலையாளம் பேசி நடித்திருக்கிறார் இயக்குநர் ஷரவண சுப்பையா.

இப்படி ஒரு நல்ல கணவர் அமைந்தால் ஒவ்வொரு பெண்ணும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதுடன், டைவர்ஸ் என்ற பேச்சே இடம் இருக்காது.

இந்த மீண்டும் திரைப்படத்தையும் இயக்கி அதில் இரண்டாவது கதாநாயகனாக நடித்து இருக்கும் அவருக்கு இது இரட்டைக் குதிரை சவாரி.

இந்த மூன்று பேரின் உறவுச் சிக்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் வேடத்தில் வரும் சிறுவனும் அற்புதத் தேர்வு.

அழகும், நடிப்புமாக அவனும் தன் பங்குக்கு அசத்துகிறான்.

இவர்களுடன் அனைத்து கதாபாத்திரங்களில் துரை சுதாகர், டைரக்டர் யார் கண்ணன், டைரக்டர் ஏஸ்.எஸ. ஸ்டான்லி, டைரக்டர் கேபிள் சங்கர், ஆதர்ஷ், அனகா, சுப பாண்டியன், அனுராதா, அபிதா செட்டி, தாரணி, இந்துமதி மணிகண்டன், மோனிஷா,
உள்ளிட்டோருடன் அந்த சிலாகி தீவில் வரும் வில்லியான லேடி ஹிட்லரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.

சிட்டிசன் ஏ.பி.சி.டி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஷரவண சுப்பையா நீண்ட வருடங்களுக்கு இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

குடும்பங்களை உள்ளே இழுக்கும் ஒரு அழகான சென்டிமென்ட் கதையுடன் உலகையே அழிவிலிருந்து மீட்கும் ஒரு கதையையும் எப்படி மிக்ஸ் செய்ய வேண்டும் என்று இயக்குநர் முடிவெடுத்தாரோ தெரியவில்லை.

அதேபோல் சுனாமி, நிலநடுக்கம் போன்ற இந்தியப் பேரழிவுகள் எல்லாம் செயற்கையாக உருவாக்கப்பட்டவை என்று அவர் சொல்லி இருப்பதை அறிவியல் உலகம் எப்படி எடுத்துக் கொள்ளுமோ..?

திரைப்படத்தில் சில இடங்களில் இயக்குனர் ஷரவண சுப்பையா எழுதியிருக்கும் இன்றைய நாட்டு நடப்பு பற்றிய வசனங்கள் சென்சாருக்குத் தப்பி வந்திருப்பது மிகவும் ஆச்சரியம்தான்.

சிட்டிசன் திரைப்படத்தில் ஒரு ஊரே காணாமல் போனதாக சொல்லி அப்படத்தை பேச வைத்த இயக்குனர் ஷரவண சுப்பையா இந்த மீண்டும் திரைப்படத்தில் சுனாமி பேரழி பற்றிய சந்தேகத்தை கிளப்பி அதிர வைத்திருக்கிறார்.

ஸ்ரீனிவாஸ் தேவம்சம் ஒளிப்பதிவு இரண்டு விதமாக கையாளப்பட்டிருப்பதால் குடும்பபாங்கான காட்சிகள் அழுத்தமாகவும், ஆக்‌ஷன் காட்சிகள் அச்சம் தரும் வகையிலும் திரைப்படமாக்கி பேச வைத்திருக்கிறார்.

நரேன் பாலகுமார் இசையில் பாடல்கள்  ரசிக்க வைக்கிறது குறிப்பாக வயிறோடு வந்த மகனா பாடல் மனதிலும்  உதட்டிலும் ஒட்டிக்கொள்கிறது வைக்கிறது.

மொத்தத்தில் மீண்டும் அனைத்து தரப்புக்குமான ஆக்‌ஷன், குடும்ப சென்ட்டிமென்ட் திரைப்படம்.

error: Content is protected !!