சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் லெஜண்ட் அருள் சரவணன் வைரலாகும் புகைப்படம்!!!
சென்னை 21 ஆகஸ்ட் 2022 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் லெஜண்ட் அருள் சரவணன் வைரலாகும் புகைப்படம்!!!
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இரட்டை இயக்குனர்கள் ஜெடி – ஜெர்ரி இயக்கத்தில் அருள் சரவணன் அறிமுக நடிகராக நடித்துள்ள திரைப்படம் ‘தி லெஜண்ட்’.
இந்த திரைப்படம் கடந்த மாதம் 28-ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் வெளியானது.
கதாநாயகிகள் ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி, சுமன், விவேக், யோகிபாபு, நாசர், ரோபோ ஷங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
இந்த தி லெஜண்ட் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்த தி லெஜண்ட் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவான தி லெஜண்ட் திரைப்படம் உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் மட்டும் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தான் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் நடிகர் அருள் சரவணன்.
லெஜண்ட் சரவணன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ‘ சூப்பர் ஸ்டார் உடனான தருணங்கள்’ என தெரிவித்து ரஜினியுடன் தான் இருக்கும் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
‘தி லெஜண்ட்’ திரைப்படம் வெளியான சமயத்தில், ‘எனது நடிப்பில் ரஜினி காந்தின் தாக்கம் இருந்தது.
அதனை தவிர்க்க முடியவில்லை ‘ என லெஜண்ட் அருள் சரவணன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Moments with Superstar @rajinikanth #Rajinikanth #TheLegend pic.twitter.com/sScxOBIXix
— Legend Saravanan (@yoursthelegend) August 20, 2022











