சூப்பர் ஸ்டார் என்பது வெறும் டைட்டில்தான்  என சுப்ரீம் ஸ்டார் நடிகர் சரத்குமார்.!!

சென்னை 17 ஜனவரி 2023 சூப்பர் ஸ்டார் என்பது வெறும் டைட்டில்தான்  என சுப்ரீம் ஸ்டார் நடிகர் சரத்குமார்.!!

வாரிசு திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலி கிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சுப்ரீம் ஸ்டார் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழ் திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன்  நடிகர் ரஜினிகாந்த் இருக்கும்பொழுதே நடிகர் விஜய்க்கு மீண்டும் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கிறீர்களே? என்று செய்தியாளரின் கேட்ட்  கேள்விக்கு கோவம் அடைந்த சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மிகவும் கோபமாக பதில் கூறினார்.

நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்
கூறியதாவது..

எனது மகனுக்கு நான்தான் சூப்பர் ஸ்டார்.

எனக்கு என் அப்பா தான் சூப்பர் ஸ்டார்.

சூப்பர் ஸ்டார் என்ற விஷயத்தை பெரிதுபடுத்தி உலகத்தில் இதுதான் மிகப்பெரிய பிரச்சினை போல் செய்ய வேண்டாம்.

நான் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று தான் சொன்னேன்.

முதலமைச்சராவார் பிரதமர் ஆவார் என்று நான் சொல்லவில்லை.

சூப்பர் ஸ்டார் என்பது டைட்டில் அவ்வளவுதான்.

நான் சுப்ரீம் ஸ்டார் சுப்ரீம் ஸ்டார் பெருசா சூப்பர் ஸ்டார் பெருசா பட்டத்தைதான் பாப்பிங்களா மனுசன பார்க்க மாட்டீங்களா’ என நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத் குமார் கோபமாக பதிலளித்தார்.