நடிகர் மோகன்லாலின் புது வீட்டிற்கு வருகை தந்த மம்முட்டி இதுதான் நட்பு!!!

சென்னை 21 ஆகஸ்ட் 2022 நடிகர் மோகன்லாலின் புது வீட்டிற்கு வருகை தந்த மம்முட்டி இதுதான் நட்பு!!!

நடிகர் மோகன்லால் மற்றும் நடிகர் மம்மூட்டி இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலையாள திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார்களாக வலம் வந்துகொண்டிருப்பவர்கள் நடிகர் மோகன்லால் மற்றும் நடிகர் மம்மூட்டி. இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இந்தியா முழுக்க இருக்கின்றனர்.

இரு நடிகர்களும் தாங்கள் நடித்த திரைப்படங்கள், அவர்களின் நடிப்பு மற்றும் பலவற்றின் மூலம் மலையாள திரைப்பட உலகம் இந்திய அளவில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் மோகன்லாலின் புதிய வீட்டிற்கு நடிகர் மம்முட்டி சஸ்பென்சாக விசிட் அடித்துள்ளது.

அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதே புகைப்படத்தை நடிகர் மம்மூட்டியும் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இருவரின் நட்பைப் பார்க்கும் ரசிகர்கள் நெகிழ்ச்சியடைத்துள்ளனர்.

இதற்கிடையில், நடிகர் மம்முட்டியின் தற்போது ரோர்சாக் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் மோகன்லால் பரோஸ் என்ற திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார்.

மேலும் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார்.

error: Content is protected !!