தாய்க் கிழவி என்று என்னை அழைக்க வேண்டாம் என நடிகை நித்யா மேனன் வேண்டுகோள் !!
சென்னை 26 ஆகஸ்ட் 2022 தாய்க் கிழவி என்று என்னை அழைக்க வேண்டாம் என நடிகை நித்யா மேனன் வேண்டுகோள் !!
என்னை ’தாய்க் கிழவி’ என்று அழைக்க வேண்டாம்” என நடிகை நித்யா மேனன் தனது ரசிகர்களிடத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
நடிகர் தனுஷ், நடிகை நித்யா மேனன் நடிப்பில் கடந்த வாரம் 18-ம் தேதி வெளியான திரைப்படம், ’திருச்சிற்றம்பலம்’. மித்ரன்ஆர் ஜவஹர் இயக்கத்தில் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளது.
இதில் கதாநாயகிகள் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், மற்றும் நித்யா மேனன் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த திரைப்படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் ‘ஷோபனா’ என்ற கதாபாத்திரத்தில் வரும் நடிகை நித்யா மேனனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த திரைப்படத்தில் ’தாய்க் கிழவி’ என்ற பாடலும் உள்ளது.
இந்தப் பாடல் பெரும் வெற்றி பெற்றதையடுத்து தற்போது சமூக வலைதளங்களில் நடிகை நித்யா மேனனை ‘தாய்க் கிழவி’ என்றே ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
ஆனால் என்னை தாய்க் கிழவி என்று பலரும் அழைப்பது தனக்குப் பிடிக்கவில்லை என்று நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் தோன்றிய நடிகை நித்யா மேனன், “ரசிகர்கள் யாரும் என்னை அந்தப் பெயரில் அழைக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
அதில் எனக்கு ஆர்வம் இல்லை” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.











