கேப்டன் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் தயவுசெய்து வதந்திகள் பரப்ப வேண்டாம் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!!
சென்னை 24 ஆகஸ்ட் 2022 தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் தயவுசெய்து வதந்திகள் பரப்ப வேண்டாம் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!!
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த்தின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசிய அவர் கேப்டன் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் என்றும், ஆக.15-ம் தேதியன்று கொடியேற்றும்போது அனைவருமே பார்த்திருப்பீர்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும்.
அதற்காக நான் தலைமைக் கழகத்திற்கு வருகிறேன் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
அதனால்தான் அன்று தலைவர் அழைத்துவரப்பட்டார் என்றும், அவரது கையால் தேசிய கொடி ஏற்றப்பட்டதாகவும் கூறினார்.
இன்றும், நாளையும் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்றுதான் கேப்டன் விஜயகாந்த் விரும்புவதாகவும், அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்றும் கூறிய பிரேமலதா விஜயகாந்த் அவர் நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.
அவர் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்.
அதேபோல் தலைவரை சந்திக்க முடியுமா, முடியுமா என்றுதான் பலரும் கேட்கிறீர்கள் என்றார்.
உங்களுடைய ( கட்சி நிர்வாகிகளின் ) ஆசையை நிறைவேற்றத்தான் தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தை அழைத்து வருகிறோம் என்றும் விளக்கமளித்தார்.
ஆனால், பலபேர் அதனை திரித்து ஏன் அவரை
கஷ்டபடுத்துகின்றனர்?
எதற்காக அழைத்து வருகின்றனர்?
என்று ஒரு தவறான பிம்பத்துக்கு அதனை தயவுசெய்து யாரும் கொண்டு செல்ல வேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டுக் கொண்டார்.
கேப்டன் விஜயகாந்த் நன்றாக இருக்கிறார் என்றும் இன்னும் பல ஆண்டுகள் அவர் நலமாக இருப்பார் என்றும் பிரேமலதா தெரிவித்தார்.











