நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படம் Netflix OTT தளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது !

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படம் Netflix OTT தளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது !

சென்னை 16 ஜனவரி 2024 இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் 75-வது திரைப்படமாக அன்னபூரணி உருவானது.

இந்த நிலையில் அன்னபூரணி திரைப்படத்தில் நடிகர்கள் ஜெய், சத்யராஜ், கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த அன்னபூரணி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதைத்தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த நிலையில், இந்தத் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா பிராமண பெண்ணாக அன்னபூரணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அன்னபூரணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை நயன்தாராவை அசைவம் சாப்பிட்ட வைப்பதற்காக ஃபர்ஹான் கதாபாத்திரத்தில் நடித்திருந்த கதாநாயகன் ஜெய் வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமரும், லட்சுமணனும் விலங்குகளை வேட்டையாடி சீதாவுடன் சேர்ந்து உண்டார்கள் என திரைப்படத்தின் வசனத்தில் இயக்குனர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வசனத்தால் அன்னபூரணி கடும் விமர்சனங்களைச் சந்தித்தது.குறிப்பாக, மும்பையைச் சேர்ந்த ஹிந்து அமைப்பின் இணையப் பிரிவினர், இந்தத் திரைப்படத்தில் ராமர் குறித்து அவதூறாகப் பேசியது மட்டுமல்லாமல் லவ் ஜிகாத்தை ஆதரிக்கும் வகையில் திரைப்படம் உருவாகியுள்ளதாகக் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்து, இப்படத்தின் மீதும் நடிகை நயன்தாரா மற்றும் ஜெய் மீதும் மும்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேலும், இப்படத்தை வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனத்தையும் புறக்கணிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்ததால், நெட்பிளிக்ஸ் அன்னபூரணி திரைப்படத்தை தளத்திலிருந்து நீக்கியுள்ளது.

சர்ச்சையான கருத்துள்ள பல படங்கள் ஓடிடியில் இருந்தாலும் ராமர் குறித்த ஒரு தகவலுக்காக நெட்பிளிக்ஸ் அன்னபூரணி படத்தை நீக்கியது சரியல்ல என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!