நடிகை நயன்தாரா நடித்து வெளிவர உள்ள ‘கனெக்ட்’ திரைப்படத்துக்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு.!

நடிகை நயன்தாரா நடித்து வெளிவர உள்ள ‘கனெக்ட்’ திரைப்படத்துக்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு.!

நடிகை நயன்தாரா, நடிகர்கள் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய், ஹனியா நஃபீஸா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம்,

இந்த ‘கனெக்ட்’ திரைப்படத்தை கொரோனா காலகட்டத்தில் நடக்கும் கதையை இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கி இருக்கிறார்.

தனது மகளுக்குப் பிடித்துள்ள பேயை, நடிகை நயன்தாரா எப்படி விரட்டுகிறார் என்பது திரைப்படம்.

வரும் டிசம்பர் 22 ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த திரைப்படம் 99 நிமிடங்கள் ஓடும் இடைவேளை இல்லை என இயக்குனர் அஸ்வின் சரவணன் தெரிவித்திருந்தார்.

இதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அனைத்து திரையரங்குகளிலும் உள்ள கேன்டீன் வியாபாரம் பாதிக்கப்பட்ட விடும் என்பதால், இடைவேளை இல்லாமல் திரைப்படத்தைத் வெளியிட முடியாது என் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவர்களே இடைவேளை கண்டிப்பாக விட்டுவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.