அண்ணன் நடிகர் டெல்லி கணேஷ்  அவர்கள் அமரராகி அனைவரையும் அழ வைத்து சென்று விட்டார் உருக்கமான பதிவு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் !

அண்ணன் நடிகர் டெல்லி கணேஷ்  அவர்கள் அமரராகி அனைவரையும் அழ வைத்து சென்று விட்டார் உருக்கமான பதிவு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் !

சென்னை 10 நவம்பர் 2024 எனக்கு 18 அல்லது 20 வயதில் காத்தாடி அண்ணா அவர்கள் நாடகக்குழுவில் எனது மூத்த சகோதரி கதாபாத்திரத்தில் நடித்தார்.

அப்போதுதான் முதன் முதலாக டெல்லி அண்ணாவை சந்தித்தேன்.

நான் நடிப்புத்துறைக்கு வந்த பிறகு எத்தனையோ திரைப்படங்களில் அவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு பெற்றேன்!

அவர் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது!

எல்லோரையும் மகிழ்வித்து மகிழ்வார்.

அவரைச்சுற்றி நண்பர்கள் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பர்.

இப்போது அண்ணா அமரராகி எல்லோரையும் அழ வைத்து சென்று விட்டார்.

அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள இயலவில்லை.

கலந்து கொள்ளக்கூடாத சூழ்நிலை. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு மனப்பூர்வமாக மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.

அன்னாரது ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும்.

“சென்று வாருங்கள் அண்ணா! எப்பிறப்பிலாவது மீண்டும் சந்திப்போம்!”

கண்ணீரோடும், கனத்த இதயத்தோடும் உங்கள் அன்பு தம்பி எம்.எஸ்.பாஸ்கர்.

error: Content is protected !!