இன்றைய ராசிபலன்கள் 11/11/2024
இன்றைய ராசிபலன்கள்
11-11-2024 திங்கள்கிழமை தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.
11-11-2024 தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, ஐப்பசி 25
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை
திதி
சுக்ல பக்ஷ தசமி – Nov 10 09:01 PM – Nov 11 06:46 PM
சுக்ல பக்ஷ ஏகாதசி – Nov 11 06:46 PM – Nov 12 04:05 PM
நட்சத்திரம்
சதயம் – Nov 10 10:59 AM – Nov 11 09:40 AM
பூரட்டாதி – Nov 11 09:40 AM – Nov 12 07:52 AM
கரணம்
சைதுளை – Nov 10 09:01 PM – Nov 11 07:58 AM
கரசை – Nov 11 07:58 AM – Nov 11 06:47 PM
வனசை – Nov 11 06:47 PM – Nov 12 05:29 AM
பத்திரை – Nov 12 05:29 AM – Nov 12 04:05 PM
யோகம்
வியாகாதம் – Nov 11 01:41 AM – Nov 11 10:36 PM
ஹர்ஷணம் – Nov 11 10:36 PM – Nov 12 07:09 PM
வாரம்
திங்கட்கிழமை
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் – 6:14 AM
சூரியஸ்தமம் – 5:53 PM
சந்திரௌதயம் – Nov 11 2:14 PM
சந்திராஸ்தமனம் – Nov 12 2:32 AM
அசுபமான காலம்
இராகு – 7:41 AM – 9:09 AM
எமகண்டம் – 10:36 AM – 12:03 PM
குளிகை – 1:31 PM – 2:58 PM
துரமுஹுர்த்தம் – 12:27 PM – 01:13 PM, 02:46 PM – 03:33 PM
தியாஜ்யம் – 03:35 PM – 05:04 PM
சுபமான காலம்
அபிஜித் காலம் – 11:40 AM – 12:27 PM
அமிர்த காலம் – 12:27 AM – 01:56 AM
பிரம்மா முகூர்த்தம் – 04:38 AM – 05:26 AM
ஆனந்ததி யோகம்
அமுதம் Upto – 09:40 AM
முசலம்
வாரசூலை
சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்
திங்கள்கிழமை ஹோரை
காலை
06:00 – 07:00 – சந் – சுபம்
07:00 – 08:00 – சனி – அசுபம்
08:00 – 09:00 – குரு – சுபம்
09:00 – 10:00 – செவ் – அசுபம்
10:00 – 11:00 – சூரி – அசுபம்
11:00 – 12:00 – சுக் – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – புத – சுபம்
01:00 – 02:00 – சந் – சுபம்
02:00 – 03:00 – சனி – அசுபம்
மாலை
03:00 – 04:00 – குரு – சுபம்
04:00 – 05:00 – செவ் – அசுபம்
05:00 – 06:00 – சூரி – அசுபம்
06:00 – 07:00 – சுக் – சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
11-11-2024 இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். கலை துறையில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவதில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
அஸ்வினி : ஆதரவுகள் கிடைக்கும்.
பரணி : மேன்மை உண்டாகும்.
கிருத்திகை : தாமதங்கள் விலகும்.
ரிஷபம்
பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபார முதலீடுகளில் சற்று ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். நெருக்கமானவர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் படிப்படியாக குறையும். கால்நடைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அசதி மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரோகிணி : கருத்து வேறுபாடுகள் மறையும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்
தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தள்ளிப்போன சில காரியங்கள் சாதகமாக அமையும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தாமதம் விலகும். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் விலகும்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : ஒத்துழைப்பான நாள்.
கடகம்
எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் ஏற்படும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். வேலையாட்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். விவேகமான செயல்பாடுகள் பிரச்சனைகளை தவிர்க்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
புனர்பூசம் : அலைச்சல் ஏற்படும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : விவேகத்துடன் செயல்படவும்.
சிம்மம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். சகோதரர்களின் வகையில் ஆதாயம் ஏற்படும். துணைவர் வழி உறவுகளிடத்தில் முக்கியத்துவம் உண்டாகும். வாடிக்கையாளர்களின் அறிமுகம் அதிகரிக்கும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்
மகம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
பூரம் : ஆதாயம் ஏற்படும்.
உத்திரம் : மதிப்புகள் கிடைக்கும்.
கன்னி
சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மனமகிழ்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். வேலையாட்களிடத்தில் பொறுமை வேண்டும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நெருக்கடியாக இருந்துவந்த சிக்கல்கள் குறையும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
அஸ்தம் : பொறுமை வேண்டும்.
சித்திரை : சிக்கல்கள் குறையும்.
துலாம்
தேவைக்கு ஏற்ப வரவுகள் கிடைக்கும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். ரசனைத் தன்மையில் மாற்றம் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகளால் மாற்றங்கள் பிறக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
சித்திரை : வரவுகள் உண்டாகும்.
சுவாதி : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
விசாகம் : மாற்றங்கள் பிறக்கும்.
விருச்சிகம்
நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் சாதகமாக அமையும். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்
விசாகம் : ஒத்துழைப்புகள் உண்டாகும்.
அனுஷம் : எண்ணங்கள் சாதகமாகும்.
கேட்டை : மதிப்புகள் கிடைக்கும்.
தனுசு
மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். திடீர் பயணங்களால் உற்சாகம் உண்டாகும். கலைத்துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் மறையும். விவசாயத்தில் மேன்மையான உதவிகள் கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
பூராடம் : வாய்ப்புகள் ஏற்படும்.
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
மகரம்
நண்பர்களிடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வாத திறமையால் ஆதாயம் அடைவீர்கள். நேர்மைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். விவசாயத்தில் அரசு வழியில் ஆதாயம் ஏற்படும். உறவுகளிடத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள் மறையும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
திருவோணம் : மதிப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : மனக்கசப்புகள் மறையும்.
கும்பம்
மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். வெளி நபர்களிடம் கவனம் வேண்டும். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். புதிய தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அவிட்டம் : கனவுகள் பிறக்கும்.
சதயம் : செலவுகள் உண்டாகும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
மீனம்
உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவீர்கள். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கோபமான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. இனம்புரியாத சிந்தனைகளால் மனப்போராட்டம் ஏற்படும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகள் அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : முயற்சிகள் அதிகரிக்கும்.
நவசக்தி பாரம்பரிய ஜோதிடம். ஜோதிட ஆதித்யா வாஸ்து பிரசன்ன ஜோதிடர் ஆயுர்வேத மருத்துவ நிபுணர். T.MUNIRAJAN +919942285750



