இன்றைய ராசிபலன்கள் 14/07/2024

இன்றைய ராசிபலன்கள்

ஆனி: 30 ஞாயிறுகிழமை

14/07/2024

  

மேஷம் – ராசி.

உங்கள் மீதான எண்ணங்களில் மாற்றம் ஏற்படும். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். மக்கள் தொடர்பு பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்.

அஸ்வினி : மாற்றம் ஏற்படும்.
பரணி : முன்னேற்றம் அடைவீர்கள்.
கிருத்திகை : ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம் – ராசி.

விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். ஆன்மிக காரியங்களில் தெளிவு பிறக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

கிருத்திகை : தடைகள் விலகும்.
ரோகிணி : தெளிவுகள் பிறக்கும்.
மிருகசீரிஷம் : வரவுகள் ஏற்படும்.

மிதுனம்- ராசி.

கலை சார்ந்த துறைகளில் சிந்தித்துச் செயல்படவும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். அலுவல் பணிகள் சற்று குறையும். நாவல் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

மிருகசீரிஷம் : சிந்தித்துச் செயல்படவும்.
திருவாதிரை : ஈடுபாடு அதிகரிக்கும்.
புனர்பூசம் : அனுகூலமான நாள்.

கடகம் – ராசி.

பெரியோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வி சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நெருக்கமானவர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை அமையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்.

புனர்பூசம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
பூசம் : மாற்றமான நாள்.
ஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும்.

சிம்மம் – ராசி.

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். வாகன பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.

மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : அமைதி உண்டாகும்.
உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.

கன்னி – ராசி.

சிறு தூர பயணங்களால் மாற்றம் ஏற்படும். பத்திரம் தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்கள் மூலம் சாதகமான சூழ்நிலை ஏற்படும். வாகன பயணங்களில் கவனத்துடன் இருக்கவும். அடமான பொருட்கள் பற்றிய எண்ணங்கள் பிறக்கும். தடைகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்.

உத்திரம் : மாற்றம் ஏற்படும்.
அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.
சித்திரை : கவனம் வேண்டும்.

துலாம் – ராசி.

எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வரவில் இருந்துவந்த நெருக்கடிகள் ஓரளவு குறையும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். உயர்கல்வி சார்ந்த விஷயங்களில் தெளிவு பிறக்கும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

சித்திரை : சிந்தித்துச் செயல்படவும்.
சுவாதி : பொறுமை வேண்டும்.
விசாகம் : மாற்றங்கள் ஏற்படும்.

விருச்சிகம் – ராசி.

வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் திருப்பமான சூழல் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். பிற மொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.
அனுஷம் : அனுபவங்கள் ஏற்படும்.
கேட்டை : ஆதரவுகள் கிடைக்கும்.

தனுசு – ராசி.

சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். விவசாயப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கமிஷன் சார்ந்த வியாபார பணிகளில் லாபமடைவீர்கள். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

மூலம் : செல்வாக்க அதிகரிக்கும்.
பூராடம் : குழப்பம் விலகும்.
உத்திராடம் : லாபகரமான நாள்.

மகரம் – ராசி.

குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய தொழில் தொடர்பான ஆயத்த பணிகள் கைகூடும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

உத்திராடம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.
திருவோணம் : ஈடுபாடு உண்டாகும்.
அவிட்டம் : எண்ணங்கள் கைகூடும்.

கும்பம் – ராசி.

குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வேள்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். உறவினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். திறமைக்கேற்ப வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

அவிட்டம் : வசதிகளை மேம்படுத்துவீர்கள்.
சதயம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம் – ராசி.

உத்தியோகப் பணிகளில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். சமூகப் பணிகளில் அனுசரித்துச் செல்லவும். சிறு வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உடன்பிறந்தவர்களின் வழியில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

பூரட்டாதி : கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.
ரேவதி : புரிதல்கள் மேம்படும்.