இன்றைய ராசிபலன்கள் 28/07/2024

இன்றைய ராசிபலன்கள்.
ஆடி : 12 ஞாயிற்றுகிழமை.
 ஜூலை 28/07/2024.

மேஷம் – ராசி.

உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். உடல் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் ஏற்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும்.
பரணி : புரிதல் மேம்படும்.
கிருத்திகை : சோர்வுகள் உண்டாகும்.

ரிஷபம் – ராசி.

குழந்தைகளின் உணர்வுகளை அறிந்து கொள்வீர்கள். திடீர் பயணங்களால் நெருக்கடிகள் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். அரசு தொடர்பான பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். மறதி மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

கிருத்திகை : நெருக்கடிகள் ஏற்படும்.
ரோகிணி : கருத்துகளை தவிர்க்கவும்.
மிருகசீரிஷம் : புதுமையான நாள்.

மிதுனம்- ராசி.

உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். விவசாய பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். புதுவிதமான பணிகளின் மீது ஈர்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்.

மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.
திருவாதிரை : ஈர்ப்பு உண்டாகும்.
புனர்பூசம் : தீர்வு கிடைக்கும்.

கடகம் – ராசி.

அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதம் மறையும். சமூகப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ துறைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூசம் : முடிவுகள் கிடைக்கும்.
ஆயில்யம் : ஆதரவான நாள்.

 

சிம்மம் – ராசி.

ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

மகம் : மேன்மை ஏற்படும்.
பூரம் : ஆதரவுகள் கிடைக்கும்.
உத்திரம் : சிந்தித்துச் செயல்படவும்.

கன்னி – ராசி.

பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய முடிவுகளை தவிர்க்கவும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

உத்திரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அஸ்தம் : அனுசரித்துச் செல்லவும்.
சித்திரை : தாமதமாக கிடைக்கும்.

துலாம் – ராசி.

மற்றவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். பயம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வேகத்தை விட விவேகமான செயல்பாடுகள் நன்மையை ஏற்படுத்தும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கும். கூட்டாளிகளிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

சித்திரை : புரிதல்கள் உண்டாகும்.
சுவாதி : நன்மையான நாள்.
விசாகம் : வாதங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம் – ராசி.

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். சிக்கலான விஷயங்களுக்கு கலந்து ஆலோசித்து முடிவு செய்வது நல்லது. பணிகளில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். இணையம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

விசாகம் : புரிதல்கள் அதிகரிக்கும்.
அனுஷம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
கேட்டை : ஆதரவுகள் கிடைக்கும்.

தனுசு – ராசி.

பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து மூலம் லாபம் கிடைக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். சமூக நிகழ்வுகளால் சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். புத்திரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

மூலம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திராடம் : அனுபவம் வெளிப்படும்.

மகரம் – ராசி.

உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உறவினர்களின் வழியில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். கட்டுமான பணிகளில் அலைச்சல் ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். இனம்புரியாத சிந்தனைகள் மூலம் அவ்வப்போது தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். கால்நடை தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

உத்திராடம் : எதிர்ப்புகள் குறையும்.
திருவோணம் : மாற்றமான நாள்.
அவிட்டம் : பொறுமை வேண்டும்.

கும்பம் – ராசி.

புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்டு வந்த சொத்து விற்பனை சாதகமாக முடியும். சமூகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளால் வியாபார சரக்குகளை விற்று லாபம் அடைவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : தன்னம்பிக்கை மேம்படும்.
பூரட்டாதி : ஆதரவான நாள்.

மீனம்ராசி.

குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். தனவருவாயிலிருந்து வந்த இழுபறி குறையும். உத்தியோகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். புதுவிதமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள். சுப காரிய பணிகளில் பொறுமை வேண்டும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

பூரட்டாதி : அறிமுகங்கள் ஏற்படும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரேவதி : பொறுமை வேண்டும்.