‘ஹாட் ஸ்பாட் 2மச்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- பிரியா பவானி சங்கர், பிரிகிடா சாகா, அஷ்வின் குமார், ரக்ஷன், ஆதித்யா பாஸ்கர், விக்னேஷ் கார்த்திக்,  கே.ஜே, பவானி ஸ்ரீ, சஞ்சனா திவாரி, தம்பி  ராமையா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- விக்னேஷ் கார்த்திக்.

ஒளிப்பதிவாளர் :- ஜெகதீஷ் ரவி | ஜோசப் பால்.

படத்தொகுப்பாளர் :- யு. முத்தையன்.

இசையமைப்பாளர் :- சதிஷ் ரகுநாதன்.

தயாரிப்பு நிறுவனம் :- கே.ஜே.பி டாக்கீஸ், ஆன்ட்ஸ் டு எலிஃபென்ட்ஸ் சினிமாஸ் அண்ட் கோ.

தயாரிப்பாளர்கள் :- .ஜே. பாலமணிமார்பன் | அனில் கே ரெட்டி.

ரேட்டிங் :-  3.5./5.

ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் புதுமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்  நான்கு வெவ்வேறு கதைகள் மூலம் திரைப்பட ரசிகர்களின்  ஆதரவை பெற்ற ‘ஹாட் ஸ்பாட்’ திரைப்படத்தின் தொடர்ச்சி தான் இந்த ‘ஹாட் ஸ்பாட் 2’ மச் . முதல் பாகத்தைப் போலவே இதிலும், அதே தயாரிப்பாளரிடம் அறிமுக இயக்குநர் பிரியா பவானி சங்கர் கதை சொல்ல வருகிறார்.

அவருடைய நோக்கமும் முதல் பாகத்தின் இயக்குநருடையது தான் என்றாலும், அவர் பேச இருக்கும் விஷயங்கள் அனைத்தும் தனிப்பட்ட ஒருவருக்கானது அல்ல, ஒரு சமூகத்திற்கானது என்பதை கதையின் மூலம் சொல்கிறார்.

கூறும் கதையின் மூலம் மக்களுக்கும் சமூகத்திற்கும் இயக்குநர் ப்ரியா பவானி சங்கர் எதை புரிய வைக்க முயற்சிக்கிறார் ? என்பது தான் இந்த ‘ஹாட் ஸ்பாட் 2’. திரைப்படத்தின் மீதிக்கதை.

திரைப்பட உலகில் மிகப்பெரிய உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் இரண்டு உச்ச நட்சத்திரங்களின் வெறித்தனமான இருக்கும் ரசிகர்களைப் பற்றிய முதல் கதையும்

நாகரிக பெண்கள் கொடுத்தும் உடைகளை பற்றியும் பெண்ணியம் மற்றும் ஆடை சுதந்திரம் என்ற பெயரில் தாய் தந்தையர்களின் மனதை புரிந்துக் கொள்ளாத இன்றைய கால கட்டங்களில் உள்ள இளைஞர்களின் பற்றியும்.

காதலின் தற்போதைய நிலையை எண்ணி கவலைப்படும் ஆண்கள், என  மூன்று தரப்பினரையும்  வெவ்வேறு கதைகளில், இரு தரப்பிலும் இருக்கும் நியாயத்தை பேசியிருக்கும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், இந்த மூன்று கதைகளை விவரிக்கும் அறிமுக இயக்குநரின் சொந்த கதை மூலம் உலகளவில் பேச்சுபொருளாக உள்ள ஒரு விசயத்தை பற்றி அழுத்தமாக  சொல்லியிருக்கிறார்.

திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்து திரைப்பட ரசிகர்களை  திருப்திப்படுத்த போராடுவதை விட, சமூகப் பிரச்சனைகளை குட்டி குட்டி கதைகளை ஒன்று சேர்த்து சொல்லி வெற்றி பெற்ற இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், அதையே தனது பாணியாக தொடர்ந்திருப்பது முதல் பாகத்தைப் போலவே கை கொடுத்தது போலவே இந்த இரண்டாவது பாகமும் சமூக பிரச்சனைகளை பேசி கை கொடுத்திருக்கிறது.

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், பேசும் ஒவ்வொரு சமூக பிரச்சனையிலும், இரு தரப்பிலும் இருக்கும் நியாயத்தை பேசி, நடுநிலையாக பேசி இருக்கிறார். 

தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் இயக்குனராக பிரியா பவானி சங்கர், கதைகளை சொல்லும் கதாபாத்திரமாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இளைஞர்களுக்கு அறிவுரை கூறும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் கவனம் ஈர்ப்பது போல், தனது அதிரடியான நடிப்பு மூலம் 2கே கிட்ஸுகளுக்கு அதிரடியான அறிவுரை வழங்கி இருக்கிறார்.

இந்த ‘ஹாட் ஸ்பாட் 2 மச் ‘ திரைப்படத்தில் நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், அஸ்வின், ஆதித்யா பாஸ்கர், விஜய் டிவி ரக்‌ஷன், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், தயாரிப்பாளர் கே.ஜெ.பாலமணிமர்பன், ஸ்ரீ, பிரிகிடா, சஞ்சனா திவாரி ஆகியோர் கொடுத்த வேலையை எந்தவிதமான குறையும் இல்லாமல்  மிக அருமையாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கிறார்கள்.

பெண்களின் மனங்களையும் நினைத்து கவலை கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஸ்வின் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது.

அஸ்வின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அமரனின் டைமிங் வசனங்கள் திரையரங்குகளில் சிரிப்பொலியாக அமைந்திருக்கிறது. 

ஒளிப்பதிவாளர்கள் ஜெகதீஷ் ரவி, ஜோசப் பால் ஒளிப்பதிவின் மூலம்  திரைப்படத்தில் நான்கு கதைகளில் வித்தியாசத்தை காட்டி கவனம் ஈர்த்திருக்கிறார்கள்

இசையமைப்பாளர் சதிஷ் ரகுநாதன் இசையில் ஹாட் ஸ்பாட்டின் முதல் பாகத்திற்கான பீஜியம் மற்றும் பின்னணி இசை  திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

சூடான விசயங்களை சிறப்பாக சொல்வதோடு, அதில் இருக்கும் இரண்டு தரப்பினர் பக்கம் இருக்கும் நியாயத்தை சமமாக சொல்லி, அனைத்து தரப்பினரையும் சிந்திக்க வைத்து  இந்த ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ திரைப்படத்தை மிக சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.

மொத்தத்தில் ‘ஹாட் ஸ்பாட் 2’ சிறப்பு.

error: Content is protected !!