‘ஹாட் ஸ்பாட்’ திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- கலையராசன், சோஃபியா, சாண்டி, அம்மு அபிராமி, ஜனனி, சுபாஷ், கௌரி ஜி. கிஷன், ஆதித்யா பாஸ்கர், மற்றும் பலர்

எழுத்து & இயக்கம் :- விக்னேஷ் கார்த்திக்.

ஒளிப்பதிவாளர் :- கோகுல் பினோய்.

படத்தொகுப்பாளர் :-  முத்தையன் யூ.

இசையமைப்பாளர் :- சதீஷ் ரகுநாதன் | வான்.

தயாரிப்பு நிறுவனம் :- கே.ஜெ.பி டாகீஸ்.

தயாரிப்பாளர்கள் :- K.J பாலமணிமார்பன், சுரேஷ் குமார், கோகுல் பினோய்.

கதை சொல்ல வரும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கிடம் தயாரிப்பாளர் தனக்கு நேரம் இல்லை ஆகையால் 10 நிமிட நேரத்தை மட்டுமே ஒதுக்க வித்தியாசமான கதையை எதிர்பார்க்கும் தயாரிப்பாளருக்கு நல்ல நல்ல கதைகளை கொடுக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்குனராகவே நடிக்க, இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தயாரிப்பாளராகவே நடிக்க அவரிடம் கதை சொல்ல வரும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் ஒரு நான்கு நல்ல கதைகளை சொல்கிறார்.

நான்கு வெவ்வேறு கதைக்களம் கொண்ட கதைகளை அந்தாலஜி போல் இயக்கியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

முதல் கதையில் கதாநாயகன் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கதாநாயகி கௌரி கிஷன் நடித்திருக்கிறார்கள்.

இருவரும் பல வருடங்களாக காதலித்து வரும் காதலர்களாக இருக்கிறார்கள்.

காலம் மாறிய நிலையில் இருவருக்கும் திருமண ஏற்படும் நடக்க கதாநாயகி கௌரி கிஷன் கதாநாயகன் ஆதித்யா பாஸ்கர் கழுத்தில் தாலி கட்டுவதும், அதையடுத்து திருமணத்திற்குப் பிறகு பெண்கள் செய்யும் அத்தனை விசயங்களையும் ஆண்கள் செய்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

பெண்ணியத்தைப் பெருமையை போற்றும், அவர்களால் சொல்ல முடியாத மன குமுறல்களை சொல்லும் விதமாக இருக்கும் இந்த முதல் கதையை சொல்லுகிறார்.

பெண்ணியத்தை போற்றும் வகையில் கதை இருப்பதோடு, ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதிக்கும் தற்போது உள்ள காலகட்டத்தில் திருமணம் என்ற பெயரில் பெண்கள் இன்னமும் ஆணதிக்கத்திற்கு உற்பட்டு இருப்பதை சாட்டையடியாக சொல்லி இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் அவர்களுக்கு சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார்.

இந்த முதல் கதை மிகப் பெரிய அளவில் ரசிக்க வைக்கிறது.

இரண்டாவது கதைமில் கதாநாயகன் நடன இயக்குனர் சாண்டி கதாநாயகி அம்மு அபிராமி நடித்திருக்கிறார்கள்.

ஒரு மாதிரியாக காதல் கதையாக விவகாரமானது, ஆரம்பித்து ஒரு மாதிரியாகவே முடிகிறது.

இந்த கதையில் இயக்குனரால் முடிவு சொல்ல முடியவில்லை அதனால் தான் அந்த கதையில் இருக்கும் பிரச்சனைக்கு எந்தவித தீர்வுமே சொல்லாமல், அதற்கான கேள்விக்கான பதிலை திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடமே விட்டுவிடுகிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

மூன்றாவது கதையில் கதாநாயகன் சுபாஷ் கதாநாயகி ஜனனி நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகன் சுபாஷ் பணிபுரியும் அலுவலகத்தில் உள்ள டாய்லெட்டிலேயே சுய இன்பம் செய்யும் கதாநாயகன் சுபாஷ், சுய இன்பம் செய்யும் வீடியோ அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் தெரிந்த காரணத்தால் வேலை பறிபோக, தொடர்ந்து வேலையில்லாத காரணத்தால் ஒருவர் மூலம் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டு ஆண் விபச்சாரியாக பயணப்படுகிறார்..

இதில் ஆண் விபச்சாரியாக பயணம் படும்போது ஹோட்டல் அறையில் தன் தாயின் நிலையை கதாநாயகன் சுபாஷ் பார்க்கக் கூடாத சூழலில் பார்த்து, பேசக்கூடாத விஷயங்களைப் பேசி விடுகிறான்.

கதாநாயகி ஜனனிக்கு கதாநாயகன் சுபாஷ் ஆண் விபச்சாரி என தெரிந்தவுடன் இருவருக்கும் சண்டை வர அது காமம், உன்னிடம் மட்டும் தான் காதல், என்று சொல்வதும், அதற்கு கதாநாயகி ஜனனி எடுக்கும் அதிரடியாக எடுக்கும் முடிவு நானும் ஒரு நாள் உனது நண்பனுடன் உடலுறவு கொள்ள ஆசைப்படுகிறேன் என கூற கதாநாயகன் சுபாஷுக்கு மனதளவில் பாதிக்கப்பட உங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? எங்களுக்கு வந்தால் இரத்தம்,என்று பெண்கள் ஆண்களை பார்த்து கேட்கும் கேள்வியை மையப்படுத்திய அதன் பிறகு கதாநாயகன் சுபாஷ் மற்றும் கதாநாயகி ஜன்னியும் அதன்பின் இருவரும் ஒன்று சேர்கிறார்கள்.

நான்காவது கதையில் கதாநாயகன் கலையரசன் கதாநாயகி சோஃபியா நடித்திருக்கிறார்கள்.

தனியார் தொலைக்காட்சிகளில் குழந்தைகளை வைத்து நடத்தப்படும் ரியாலிட்டி ஷோகளில் நடக்கும் கொடுமைகளை வெளிக்காட்டும் விதமாக அமைந்திருக்கிறது.

இதுபோன்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறுவர்களை நடிக்க வைப்பதோடு, வயதுக்கு மீறிய காட்சிகள் மற்றும் வசனங்களில் நடிக்க வைத்து கொடுமைப்படுத்துவதை ஏன் கேட்பதில்லை இந்த அரசாங்கம் என்ற கேள்வியை முன் வைத்திருக்கும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

தனியார் தொலைக்காட்சியில் நடக்கும் இந்த ரியாலிட்டி ஷோக்கலில் பங்கு பெற வேண்டாம் என பெற்றோர்களை எச்சரிக்கவும் செய்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

நான்கு கதைகளில் நடித்திருக்கும் கலையராசன், சோஃபியா, சாண்டி, அம்மு அபிராமி, ஜனனி, சுபாஷ், கௌரி ஜி. கிஷன், ஆதித்யா பாஸ்கர் அனைவரும் தங்களது நடிப்பு மூலம் கதைகளில் இருக்கும் உணர்வுகளை மிக அருமையாகவும் வாழ வைத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயின் ஒளிப்பதிவின மூலம் நான்கு கதைகளும் நான்கு விதமான காட்சியமைப்புகளில் வித்தியாசத்தை காண்பித்திருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் சதீஷ் ரகுநாதன் மற்றும் வான் இசையில் கதையை சுற்றி வரும் பின்னணி பாடலும், பின்னணி பீஜியமும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு குதுக்கலத்துடன் வைத்திருக்கிறார்.

அந்தாலஜி முறையில் நான்கு சிறு சிறு கதைகளை வைத்துக்கொண்டு ஒரு முழுநீள திரைப்படமாக கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பாராட்டுக்கள்.

இறுதியாக சொல்லும் கதையின் மூலம் மீண்டும் ரசிகர்களை தன்வசப்படுத்துபவர், தாய் தந்தை இருவருக்கும் அறிவுரை சொல்லி பாராட்டு பெற்று விடுகிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.

மொத்தத்தில், இந்த ‘ஹாட் ஸ்பாட்’ நல்லது பாதி, கெட்டது மீதி அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.