ஜீப்ரா திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சத்யதேவ், டாலி தனஞ்சயா, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், சுனில் வர்மா, சத்யா அகல, ஜெனிஃபர் பிசினாடோ, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஈஸ்வர் கார்த்திக்.

ஒளிப்பதிவாளர் :- சத்யா பொன்மர்.

படத்தொகுப்பாளர் :- அனில் கிரிஷ்.

இசையமைப்பாளர் :- ரவி பஸ்ரூர்.

தயாரிப்பு நிறுவனம் :- ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் – பத்மஜா பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்.

தயாரிப்பாளர்கள் :- எஸ்.என். ரெட்டி – பால சுந்தரம் – தினேஷ் சுந்தரம், எஸ் பத்மஜா,ன.

ரேட்டிங் :- 4./5

இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக். இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த பென்குயின் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

தெலுங்கு திரைப்பட உலகில் எடுக்கப்பட்ட இந்த ஜீப்ரா திரைப்படம், ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக்கப்பட்டிருகிறது.

உலகம் முழுவதும் 22 நவம்பர் 2024 அன்று இந்த ஜீப்ரா வெளியாகியிருக்கிறது.

கதாநாயகன் சத்ய தேவ் மற்றும் கதாநாயகி பிரியா பவானி சங்கர் இருவரும் காதலர்களாக இருந்து வருகிறார்.

கதாநாயகன் சத்ய தேவ் கதாநாயகி பிரியா பவானி சங்கர் இருவரும் வேவ்வேறு வங்கியில் பணி புரிந்து வருகிறார்கள்.

கதாநாயகி பிரியா பவானி சங்கர் வங்கியில் ஒருவரின் செக் ஒன்றை வேறு வங்கியில் உள்ள தவறான அக்கெளண்டிற்கு பணத்தை மாற்றி போட்டு விடுகிறார்.

வேறு வங்கியில் உள்ள தவறான அக்கெளண்டில் பணம் வந்ததும், அதை எடுத்துக் கொண்டு 4 லட்சம் பணத்தை தர முடியாது என்று கூறி விடுகிறார்.

இச்சமயத்தில், கதாநாயகன் சத்ய தேவ் ஒரு மாஸ்டர் பிளான் ஒன்றை செய்கிறார்.

அந்த மாஸ்டர் பிளான்னில் இழந்த 4 லட்சம் பணத்தை மீட்டு விடுகிறார்.

அந்த மாஸ்டர் பிளான் மூலம் பணத்தை திருப்பி கிடைத்தால் வினையால் மற்றொரு கதாநாயகன் டாலி தனஞ்செயா கதாநாயகன் சத்யதேவின் வாழ்க்கையில் உள்ளே வருக்கிறார்.

கதாநாயகன் சத்ய தேவ் செய்த மாஸ்டர் பிளானால், மற்றொரு கதாநாயகன் டாலி தனஞ்செயாவிற்கு ஜந்து கோடி ரூபாய் வரை நஷ்டம் வர, அதை நான்கு நாட்களுக்குள் திருப்பி கொடுக்காவிட்டால் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்.

மற்றொரு கதாநாயகன் டாலி தனஞ்செயா மிகப்பெரிய கேங்க்ஸ்டராக இருக்கிறார்.

இதனால், நான்கு நாட்களில் மற்றொரு கதாநாயகன் டாலி தனஞ்செயாவின் பணம் ஐந்து கோடியை தயார் செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் கதாநாயகன் சத்ய தேவ்.

இறுதியில் மற்றொரு கதாநாயகன் டாலி தனஞ்செயாவின் ஐந்து கோடி பணத்தை திருப்பி கொடுத்தாரா,? கொடுக்கவில்லையா? என்பதுதான் இந்த ஜீப்ரா திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஜீப்ரா திரைப்படத்தில் கதாநாயகனாக தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் கதாநாயகன் சத்ய தேவ் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் சத்ய தேவ் தனது கதாப்பாத்திரத்தை உள்வாங்கி கதாபாத்திரமாக கனக்கச்சிதமாக பொருத்தி நடித்திருக்கிறார்.

கதாநாயகன் சத்ய தேவ் ஆடும் மாஸ்டர் பிளேவில திரைப்படம் பார்க்கும் ரசிகர்களையும் சேர்ந்து பயணிக்கும்படியாக வைத்து விடுகிறார்.

இந்த ஜீப்ரா திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக டாலி தனஞ்செயா நடித்திருக்கிறார்.

மற்றொரு கதாநாயகனாக நடித்து இருக்கிறார் டாலி தனஞ்செயா மாஸ் காட்டியிருக்கிறார்.

மற்றொரு கதாநாயகனாக டாலி தனஞ்செயா ஆக்‌ஷன் காட்சிகளில் வெறி கொண்டு நடித்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.

இந்த ஜீப்ரா திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.

கதாநாயகி பிரியா பவானி சங்கரும் காட்சிகளில் அழகாக வந்து செல்கிறார்.

கதாநாயகி பிரியா பவானி சங்கருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் அருமையாகவும் அளவாகவும் செய்து கொடுத்திருக்கிறார்.

பெரிதான காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும் சத்யராஜ் தனது காட்சிகளை அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மர் மிகவும் அருமையாக ஒளிப்பதிவு மூலம் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மர் ஒளிப்பதிவு மூலம் கலர்ஃபுல்லாக இருப்பதால், கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்கள் தனக்கே உரித்தான பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்.

எந்த ஒரு காட்சியிலும் தொய்வு ஏற்படாத வண்ணம் திரைக்கதையை படுவேகமாக நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக்.

மொத்தத்தில் ஜீப்ரா திரைப்படம் மிகவும் மிரட்டலாக உள்ளது.