பிரபல தயாரிப்பாளர் ஆர் பி செவுத்ரி ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில்   மரணம் அடைந்தார் !

பிரபல தயாரிப்பாளர் ஆர் பி செவுத்ரி ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில்   மரணம் அடைந்தார் !

சென்னை 05 மே 2026; ராஜஸ்தானனை சொந்த ஊராகக் கொண்ட தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ், என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்திருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் கொசுபத்தி தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்த   ஆர் பி செவுத்ரி. பின்னர்  திரைப்பட துறை மீதுள்ள ஆர்வத்தில் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டார்.

தயாரிப்பு, மட்டுமல்லாமல் மற்ற திரைப்படங்களுக்கு விநியோகம் ஃபைனான்ஸ் செய்து வந்தார்.

தமிழ் திரை உலகில் தயாரிப்பாளர் ஆர் பி சௌந்தரி அவர்கள் நிறைய  புதுமுக நடிகர் மற்றும் நடிகைகள் இயக்குனர்கள் வாய்ப்பு கொடுத்து  தமிழ் திரைப்பட உலகில்  அறிமுகப்படுத்தி உள்ளார்.

அதேப்போல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்கள் தயாரிப்பு மட்டுமின்றி நிறைய திரைப்படங்களை விநியோகமும் செய்துள்ளார்.

இவர் தயாரித்த தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் மூன்று முறை பிலிம்பேர் விருது பெற்றுள்ளார்.

இவருக்கு  நான்கு மகன்கள் சுரேஷ் சௌத்ரி, ஜீவன் சௌத்ரி, ரமேஷ் சௌத்ரி (ஜித்தன் ரமேஷ்) அமர் சௌத்ரி, (ஜீவா) இருவர் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.

தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ், நிறுவனம் சார்பாக மலையாள திரைப்பட உலகில்1988 ஆம் ஆண்டு அடிபாபம் (மலையாளம்) 1989 ஆம் ஆண்டு லயனம் (மலையாளம்) ஆகிய இரண்டு திரைப்படங்கள் தயாரித்தார்.

தமிழ் திரையுலகில் முதல் முறையாக தயாரித்த திரைப்படம் 1990 ஆம் ஆண்டு புது வசந்தம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட உலகில் தயாரிப்பாளராக அறிமுகமானார்.

தமிழ் திரைப்பட உலகில்  விக்ரமன் அவர்களை புது வசந்தம் திரைப்படம் மூலம் இயக்குனராக  அறிமுகப்படுத்தினார்.

தயாரிப்பாளர் ஆர் பி சவுதி அவர்களுக்கு முதல் திரைப்படத்திலேயே சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு அரசு மாநில விருது, சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு அரசு மாநில விருது, சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர்  விருது, உன்னுடைய முதல் திரைப்படம் இத்தனை விருதுகளை பெற்றுக் கொடுத்தது.

புரியாத புதிர், சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, கோகுலம், கேப்டன், நாட்டாமை, பூவே உனக்காக, சூர்யவம்சம், சொல்லாமலே, துள்ளாத மனமும் துள்ளும், நீ வருவாய் என, ஆனந்தம், சமுத்திரம், ஷாஜகான், வருஷமெல்லாம் வசந்தம், திருப்பாச்சி, ஜில்லா” உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்கள் தயாரித்திருக்கிறார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்பட உலகிலும் பல திரைப்படங்களை தயாரித்திருக்கிறார்.

தமிழ் திரைப்பட உலகில்  விக்ரமன், கே.எஸ். ரவிக்குமார், எஸ். எழில், ராஜகுமாரன், சசி, பால சேகரன், பிருந்தா சாரதி, ரவி மரியா 30 மேற்பட்ட இயக்குநர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

பெரும்பாலும் இவருடைய தயாரிப்பில் விக்ரமன், கேஎஸ் ரவிக்குமார் போன்ற இயக்குனர்களின் திரைப்படங்கள் மற்றும் சரத்குமார், விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் அதிகளவில்  வெற்றி பெற்று இருக்கிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரைப்பட உலகில் இவர் தயாரித்த முதல்திரைப்படம் ‛புது வசந்தம்’ தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் ஷபுரட்சி தளபதி விஷால் நடிப்பில் 99வது திரைப்படமாக மகுடம் திரைப்படத்தை  தயாரித்து வருகிறார்.

விரைவில் இவர்களது தயாரிப்பில் 100வது திரைப்படம் உருவாக இருந்த  நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு ஒரு திருமணத்திற்காக சென்ற தயாரிப்பாளர் ஆர் பி செவுத்ரி. இவர் சென்ற கார் சாலை விபத்தில் சிக்கிய தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி அவர்களை உடனடியாக  அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியின் உடல் நாளை சென்னை கொண்டு வரப்படுகிறது.

இறுதிச்சடங்கு சென்னையில் நடைபெறுகிறது.

இவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!