Monday, September 27
Shadow

தன்னைத் தானே இயக்குனராக செதுக்கி கொண்ட நடிகர் இயக்குநர் ஆர். சுந்தரராஜன் அவர்களின் மகன் இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன்.

சென்னை 15 செப்டம்பர் 2021 தன்னைத் தானே இயக்குனராக செதுக்கி கொண்ட நடிகர் இயக்குநர் ஆர். சுந்தரராஜன் அவர்களின் மகன் இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன்.

தமிழ் திரைப்பட உலகில் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் அவர்களது வாரிசுகளை நடிகராக தமிழ் திரைப்பட உலகில் அறிமுகம் செய்து வைக்கும் நிலையில்
ஆனால் இயக்குனர் நடிகர் ஆர். சுந்தர்ராஜன் அவருடைய மகன் ‘அனபெல் சேதுபதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் இயக்குனராக அறிமுகமாகிறார்‌.

நடிகர் இயக்குநர் ஆர். சுந்தரராஜன் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகையில்..

தனது மகனுமான அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜனுக்கு தான் எதையும் நான் கற்றுக் கொடுக்கவில்லை என்றும், அவனே உதவி இயக்குநராகப் படங்களில் பணியாற்றி சினிமா இயக்கத்தைக் கற்றுக் கொண்டதாகக் கூறியுள்ளார்.

தமிழ்ச் திரைப்பட உலகில் மூத்த இயக்குநரான நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன். இயக்கிய திரைப்படங்கள்.

அன்று சிந்திய ரத்தம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த முதல் இயஙகிய தமிழ்த் திரைப்படமாகும்.

இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், ஆர். சுந்தரம் என்ற பெயரில் இயக்கிய முதல் திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் ஜெய்சங்கர், பத்மபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

1982 பயணங்கள் முடிவதில்லை.

1982 அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை.

1982 பயணங்கள் முடிவதில்லை.

1983 சரணாலயம்.

1983 தூங்காத கண்ணென்று ஒன்று.

1984 .நான் பாடும் பாடல்.

1984 வைதேகி காத்திருந்தாள்.

1985 குங்குமச் சிமிழ்.

1985 சுகமான இராகங்கள்.

1986 அம்மன் கோயில் கிழக்காலே.

1986 மெல்லத் திறந்தது கதவு.

1986 தழுவாத கைகள்.

1988 என் ஜீவன் பாடுது.

1988 காலையும் நீயே மாலையும் நீயே.

1989 ராஜாதிராஜா.

1990 எங்கிட்ட மோதாதே.

1990தாலாட்டு பாடவா.

1991 ஒயிலாட்டம்.

1991 சாமி போட்ட முடிச்சு.

1992திருமதி பழனிச்சாமி.

1994என் ஆசை மச்சான்.

199 5காந்தி பிறந்த மண்.

1995 சீதனம்.

1997காலமெல்லாம் காத்திருப்பேன்.

1999 சுயம்வரம்.

2013 சித்திரையில் நிலாச்சோறு.

உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் நடிகர் ஆர்.சுந்தர்ராஜன்.

இவரது மகன் தீபக் சுந்தர்ராஜன். இவர்தான் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் ‘அனபெல் சேதுபதி’ திரைப்படத்தின் இயக்குநராவார்.

இந்த ‘அனபெல் சேதுபதி’ திரைப்படம் உலகமெங்கும் வரும் செப்டம்பர் 17 அன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தின் முன்னோட்டமாக, இயக்குநர் நடிகர் சுந்தர்ராஜனும், அவரது மகனும் அறிமுக இயக்குநருமாகிய,  தீபக் சுந்தர்ராஜனும் இணைந்து பத்திரிக்கையாளர் நேற்று மாலை சந்தித்தனர்.

Read Also  தென்னிந்திய கலை, கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியமிக்கது: ஆளுநர் புகழாரம்

இந்நிகழ்வில் நடிகர் இயக்குநர் R சுந்தர்ராஜன் பேசும்போது…

“நான் சினிமாவுக்கு வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது.

எனது ஆரம்ப கால படங்களுக்கு விமர்சனம் தந்த பத்திரிக்கையாளர்கள் பலர் இங்கு வந்துள்ளனர்.

எனது திரைப் பயணத்திற்கு ஆதரவும், பாராட்டும் தந்த பத்திரிக்கையாளர்கள், என் மகனுக்கும் அதே ஆதரவை தந்து வளர்த்து விட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு இந்தப் படத்தின் கதை எதுவும் தெரியாது.

இந்தப் படம் பற்றியும் எதுவும் தெரியாது,  அவனே வளர்ந்து வரட்டும் என்று அவன் விசயத்தில் நான் தலையிடவில்லை.

அவன் சினிமாவிற்குள்தான் போக வேண்டும் என்று கேட்டபோது ஏ.எல்.விஜய்யிடம் சேர்த்துவிட்டேன். அவரிடத்தில்தான் இயக்குதலை அவன் கற்றுக் கொண்டான். நான் எதையும் அவனுக்குச் சொல்லித் தரவில்லை.

தயாரிப்பாளர் டபுள் பாஸிட்டிவ் பார்த்து விட்டு நன்றாக வந்திருப்பதாக எனக்கு போன் செய்து சொன்னார். அதைக் கேட்டபோது சந்தோஷமாக இருந்தது.

நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றவில்லை.

அதனால் எனக்கு கடைசி படம்வரையிலும் ஒவ்வொரு படத்திலும் ஒரு தடுமாற்றம் இருந்து கொண்டே இருந்தது.

ஆனால் என் மகனிடம் அது இல்லை.

இங்கு வந்து பாடல்கள், டிரெய்லரையெல்லாம் பார்த்த போது அவனிடம் முதல் படம் என்ற தயக்கம் எதுவும் இல்லாமல், தெளிவாக செய்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.

என் மகனுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்…” என்று கேட்டுக் கொண்டார்.

CLOSE
CLOSE