‘பிளாஸ்ட்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி, விவேக் பிரசன்னா, ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், திலீபன் வினோத் சாகர, பி எல் தேனப்பன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சுபாஷ் கே ராஜ்.
ஒளிப்பதிவாளர் :- அருண் ராதாகிருஷ்ணன்.
படத்தொகுப்பாளர் :- பிரதீப் இ ராகவ்.
இசையமைப்பாளர் :- ரவி பஸ்ரூர்.
தயாரிப்பு நிறுவனம் :- ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்.
தயாரிப்பாளர்கள் :- கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் & கல்பாத்தி எஸ். சுரேஷ், அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி.
மக்கள் தொடர்பு :- நிகில் முருகன்.
ரேட்டிங் :- 3.75./5.
கராத்தே ஆசிரியராக இருக்கும் கதாநாயகன் அர்ஜுன், தன்னுடைய மகள் ப்ரீத்தி முகுந்தனுக்கு சிறு வயது முதல் இருந்தே கராத்தே கற்றுக்கொடுத்து தனது மகள் ப்ரீத்தி முகுந்தன், எப்போதுமே, யாருடைய, துணையும் இல்லாமல் மிகவும் துணிச்சலாகவும் இருக்க வேண்டும் என்று கராத்தே கலையை கற்றுக் கொடுத்து சிறு வயது முதலே மிகவும் துணிச்சலான பெண்ணாக வளர்த்து வருகிறார்.
தன்னுடைய சொந்த பந்தங்கள் மட்டுமின்றி வேறு யாராக இருந்தாலும் எங்கு தவறு நடந்தாலும், அவர்களுக்கு துணையாக நிற்க வேண்டும் என தனது மகள் ப்ரீத்தி முகுந்தன்,
சொல்லி சொல்லி
வளர்க்கிறார்.
தனது தந்தை சொல்லைக் கேட்டு வளர்த்த ப்ரீத்தி முகுந்தன், தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது போலவே தன் கண்முன் நடக்கும் அநியாயங்களை கண்டும் காணாமல் செல்லாமல், தட்டிக்கேட்கிறார்.
தன்னுடைய மகள் ப்ரீத்தி முகுந்தன், தந்தையின் பேச்சை கேட்டு இப்படி வளர்ந்துவிட்டதால், இதனால் தனது குடும்பத்துக்கோ தனது மகளுக்கும் பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்வாரோ என தன் மகள் ப்ரீத்தி முகுந்தனை
நினைத்து தாய் அபிராமி தினம் தினம் கவலை கொள்கிறார்.
கதாநாயகன் அர்ஜுன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் அபிராமி
இவர்களின் வாழ்க்கை ஒரு பக்கம் நகர, மறுபக்கம் வில்லன் ஜான் கொக்கன்,
மிகவும் விலைஉயர்ந்த கனிமங்களை எடுக்க, மலைக்குக் கீழ் உள்ள ஒரு கிராமத்தையே அழிக்க திட்டமிடுகிறார்.
இதற்காக அந்தத் துறையை சேர்ந்த அமைச்சர் பி எல் தேனப்பன் சந்தித்து அனுமதி கேட்க, இந்த திட்டத்தின் முழு மதிப்பு 7,000 கோடி அதில் அமைச்சர் பி எல் தேனப்பன் எனக்கு 1,000 கோடி கொடுக்க வேண்டும் என கேட்கிறார்.
அமைச்சர் பி எல் தேனப்பன் கொடுக்க வேண்டிய 1000 கோடி பணத்தை வில்லன் ஜான் கொக்கன், ஏற்பாடு செய்து, முக்கிய நபர் ஒருவரிடம் பொறுப்பு ஒப்படைக்கிறார்.
ஆனால், அந்த முக்கியமான நபரால் இந்த 1000 கோடி பணத்தை அமைச்சர் பி எல் தேனப்பனிடம் சேர்க்க முடியாமல் போகிறது,
இதற்கிடையில் அமைச்சர் பி எல் தேனப்பனுக்கு சேர வேண்டிய இந்த ஆயிரம் கோடி பிரச்சனையில் கதாநாயகன் அர்ஜுன் குடும்பத்தை சேர்ந்த மனைவி அபிராமி மகள் ப்ரீத்தி மிகுந்தன் விவேக் பிரசன்னா சிக்கிக்கொள்ள, இதன்பின் என்ன நடந்தது?
கதாநாயகன் அர்ஜுன் குடும்பம் இதில் எப்படி சிக்கினார்கள்? இதிலிருந்து கதாநாயகன் அர்ஜுன் குடும்பத்தினர் பிரச்சனையில் இருந்து தப்பித்தார்களா?, தப்பிக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘பிளாஸ்ட்.’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன், நடித்திருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன், இவரை பற்றி நாம் கண்டிப்பாக சொல்லித்தான் அனைவருக்கும் தெரியவேண்டும் என்பது இல்லை ஆனால் திரைத்துறை வாழ்க்கையில் 46 ஆண்டு காலமாக ஆக்ஷனில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.
ஒரு திரைப்படத்தில் இரண்டு மூன்று ஆக்ஷன் காட்சிகளில் நாம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் அர்ஜுனை பார்த்து வியந்தது மட்டுமல்லாமல் தன் மகளின் மீது பாசம் தன் குடும்பத்தார் மீது உள்ள அக்கறை என
இந்த திரைப்படத்தில் வரும் பல சண்டை காட்சிகளில் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு கராத்தே ஆசிரியர் கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்துள்ளார்.
இந்த ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் கதையின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு நிகரான ஆக்ஷன் காட்சிகளில் கதையின் நாயகி ப்ரீத்தி முகுந்தன் மிரட்டியுள்ளார்.
கதையின் நாயகி ப்ரீத்தி முகுந்தன் ஆக்சன் அதிரடி நாயகியாக இந்த ”பிளாஸ்ட்’ திரைப்படத்தில் நடிகை விஜயசாந்தி இல்லாத குறையை நிறைவேற்றிவிட்டார்.
நடிகை ப்ரீத்தி முகுந்தன் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகையாக இதுவரை பாராட்டுக்கள் கிடைக்காமல் இருந்திருக்கலாம்.
ஆனால், இந்த பிளாஸ்ட் திரைப்படத்திற்கு பின்னர் ஆக்ஷன் கிங் மகள் கதாபாத்திரத்தில் நடித்த இவரை இனி ஆக்ஷன் பிரின்சஸ் என்று கூட கண்டிப்பாக அழைக்கலாம்
அந்த அளவிற்கு மிகவும் சிறப்பாக கதையின் நாயகி ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார்.
மேலும், கதாநாயகன் ஆக்சன் கிங் அர்ஜுன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிராமி விருமாண்டி அன்னலட்சுமியா இது என கேட்கும் அளவிற்கு சண்டை காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.
நடிகை அபிராமி. உடல் எடையை குறைத்து கடினமான சண்டை காட்சிகளில் பட்டையை கிளப்பியுள்ள அபிராமிக்கு எங்களது மூவி விங்ஸ் இணையதளம் சார்பாக பாராட்டுக்கள்.
இந்த ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் கவனம் பெற்றவர் என்றால் அது, வேறு யாரும் இல்லை நடிகர் அர்ஜுன் சிதம்பரம்
தான் இவர் ஏற்கனவே பொன்னியின் செல்வன், நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் அர்ஜுன் சிதம்பரத்திற்கு கண்டிப்பாக இந்த ‘பிளாஸ்ட்’ திரைப்படம் அவருடைய திரை துறை வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல்லாக அமையும்.
இந்த ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் கதாநாயகன் ஆக்சன் கிங் அர்ஜுன் தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் கொக்கன், மற்றொரு வில்லன் புத்தகத்தில் நடித்திருக்கும் பவன், பவன் தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலா ஹாசன், காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திலீபன் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வினோத் சாகர, அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பி எல் தேனப்பன், மேலும், மற்ற அனைத்து நடிகர்கள், நடிகைகளும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தனர்.
இந்த திரைப்படத்தின் தலைப்பு போலவே, ஆரம்பத்தில் இருந்து திரைப்படம் முழுக்க சண்டை காட்சிகள் எல்லாம் பிளாஸ்ட் தான்.
ஒவ்வொரு சண்டை காட்சிகளையும் நேர்த்தியாகவும், அதே சமயம் விறுவிறுப்பாகவும் எடுத்துள்ளனர்.
அதற்கு ஸ்டண்ட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபுவுக்கு எங்களது மூவி பின் இணையதளம் சார்பாக முதல் வாழ்த்துக்கள்.
எந்த ஒரு இடத்தில் கூட திரைப்படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகள் சலிக்கவோ அல்லது முகம் சுழிக்கும் அளவிற்கோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சிகளிலும் மற்றும் சண்டைக் காட்சிகளில் மிகப் பெரிய அளவில் உழைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்துள்ளது.
முதல் திரைப்படத்திலேயே பேமிலி ஆக்ஷன் ட்ராமா கதைக்களத்தை தேர்ந்தெடுத்து, இந்த திரைப்படத்தை மிகச் சிறப்பாக இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ்.
மொத்தத்தில், ‘பிளாஸ்ட்’ திரைப்படம், ஆக்சன் திரைப்பட ரசிகர்களுக்கு ‘ கண்டிப்பாக பிடிக்கும் குடும்பத்துடன் திரையரங்கு சென்று பார்க்கலாம்.











