‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.75/5.

நடிகர் & நடிகைகள் :- சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா, சரண்யா பொன்வண்ணன், VTV கணேஷ், நாசர், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நமோ நாராயணா, ஆதித்ய கதிர், எல்லி அவ்ராம், ஜேசன் ஷா, பெனடிக்ட் காரெட், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- செல்வின் ராஜ் சேவியர்.

ஒளிப்பதிவாளர் :- எஸ். யுவா.

படத்தொகுப்பாளர் :- பிரதீப்: இ. ராகவ்.

இசையமைப்பாளர் :- யுவன் சங்கர் ராஜா.

தயாரிப்பு நிறுவனம் :- ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்.

தயாரிப்பாளர்கள் :- கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ்.

ரேட்டிங் :- 3.75/ 5.

கதாநாயகன் சதீஸ் வீடியோ கேம் ப்ரோக்ராம் செய்வதிலும் விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

இந்த கேம் சாஃப்ட்வேர் துறையிலேயே வேலை தேடி கொண்டிருக்கும் கதாநாயகன் சதீஷ், ஒரு நாள் இன்டர்வியூக்கு செல்ல வேண்டும் என அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்க பாத்ரூமில் தண்ணி வராத காரணத்தால் தனது வீட்டிற்கு பின்னால் இருக்கும் கிணற்றில் தண்ணீர் எடுக்கும் போது அந்த பக்கெட்டில் டிரீம் கேட்சர் என்னும் சூனியம் வைக்கப்பட்ட பொம்மை ஒன்று கிடைக்கிறது.

அந்த ட்ரீம் கேட்சர் என்னும் சூனிய பொம்மையில் இருந்து உள்ள ஒரு இறகை பிடுங்கி தூக்கி எறிந்து விடுகிறார்.

அந்த ட்ரீம்கேச்சர் பொம்மையை தூக்கி எறிந்த நாள் முதல் கதாநாயகன் சதீஷ் எப்பொழுது தூங்கினாலும் கனவு உலகத்திற்கு சென்று விடுகிறார்‌.

அங்கு பெரிய அரண்மனையில் ஒரு பேய் அவரை மிரட்டுகிறது.

சில நாட்களில் இவருடன் தந்தை விடிவி கணேஷ், தாய் சரண்யா, மாமா நமோ நாராயணன், டாக்டர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் தன்னிடம் பணம் கேட்டு தொந்தரவு பண்ணும் தாதா ஆனந்தராஜ் உள்ளிட்டோரை கனவு உலகத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.

இறுதியில் கதாநாயகன் சதீஷ் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கனவு உலகத்தில் இருந்து தப்பித்தார்களா? தப்பிக்கவில்லையா? கனவு உலகத்தில் மிரட்டும் பேய்கள் யார்? எதற்காக மிரட்டுகிறார்கள்? என்பதுதான் இந்த கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் சதீஸ், வழக்கமாக அனைத்து திரைப்படங்களிலும் காமெடியாக நடிப்பதை மட்டும் வழக்கமாக கொண்டிருந்த சதீஷ் இந்தத் திரைப்படத்தில் காமெடி நடிப்பை தாண்டி மிக சீரியசாக நடித்துள்ளார்.

அந்த அரண்மனையில் உள்ள பேய்களிடம் பயப்படும் காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

நான் காமெடி நடிகன் மட்டுமல்ல கதாநாயகன் மட்டுமல்ல எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை இந்த திரைப்படம் மூலம் நிரூபித்திருக்கிறார் கதாநாயகன் சதீஷ்.

இந்த கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்திருக்கிறார்.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் என்றே சொல்லலாம்.

கதாநாயகி ரெஜினா கசாண்ட்ரா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.

கதாநாயகி ரெஜினா கசாண்ட்ராவின் உடை, நடை அனைத்தும் இந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.

கதாநாயகன் சதீஷ் தந்தையாக நடித்திருக்கும் விடிவி கணேஷ், தாயாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன், தாய் மாமனாக நடித்திருக்கும் நமோ நாராயணன், நாசர் அனைவரும் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

மனநல மருத்துவராக கத பத்திரத்தில் நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி மற்றும் தாதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆனந்தராஜ் மற்றும் ஆதித்யா கதிர் காமெடியில் ஆங்காங்கே திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைத்து இருக்கிறார்கள்.

எல்லி அவ்ராம் மிக அழகான பேயாக வந்து மனதில் பதிந்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் எஸ் யுவாவின் ஒளிப்பதிவு கதை மற்றும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் எஸ் யுவாவின் அந்த பேய் அரண்மனையில் லைட்டிங் மற்றும் ஒலிப்பதிவு ஹாலிவுட் திரைப்படங்கள் உள்ள ஒளிப்பதிவு போல் இருக்கிறது.

இந்த கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படத்திற்கு பெரிய பலம் இசையமைப்பாளர் இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜாவின் இசை அருமையாக இருக்கிறது.

பேய் திரைப்படத்திற்கு ஏற்றவாறு பின்னணி இசையில் இசையமைப்பாளர் இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜா
மிரட்டி இருக்கிறார்.

படத்தொகுப்பாளர் பிரதீப் ஏ ராகவ் படத்தொகுப்பு ரசிக்க வைத்துள்ளது.

தமிழ் திரைப்பட உலகில் எவ்வளவோ பேய் திரைப்படங்கள் அமானுஷ்ய திரைப்படங்கள் வந்திருந்தாலும் இந்த திரைப்படமும் வழக்கமான பேய் திரைப்படங்களுக்கு உண்டான பங்களா, பிளாஷ்பேக் என அதே டெம்ப்ளேட்டில் புதிய கதையை வடிவமைத்து அருமையான திரை கதையை கொடுத்து இந்த கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர்.

தூங்காமல் இருக்க அனைவரும் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில் இந்த கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படம் குழந்தை குட்டிகளுடன் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு அருமையான திரைப்படம்.

பின்குறிப்பு :- இந்தத் திரைப்படத்தை பார்த்து சிரித்து சிரித்து வயிறு வலித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் படக்குழுவினர் பொறுப்பல்ல.

error: Content is protected !!