‘எங்கள் தங்கம்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- சமந்தா, திகந்த் மஞ்சாலே, கௌதமி, ஆனந்த், ஸ்ரீ லக்ஷ்மி, குல்ஷன் தேவய்யா, மன்ஜூஷா, சைதன்ய கிருஷ்ணா, ஸ்ரீமுகி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- B V நந்தினி ரெட்டி.
ஒளிப்பதிவாளர் :- ஓம் பிரகாஷ் ISC.
படத்தொகுப்பாளர் :- தர்மேந்திர காகராலா.
இசையமைப்பாளர் :- சந்தோஷ் நாராயணன்.
தயாரிப்பு நிறுவனம் :- டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- ராஜ் நிடிமொரு, சமந்தா, ஹிமான்க் ரெட்டி துவ்வூரு.
மக்கள் தொடர்பு :- யுவராஜ்.
ரேட்டிங் :- 3.5./5.
கதாநாயகி சமந்தா தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட, காரணத்தினால் தன்னுடைய கணவர்,திகந்த் மஞ்சாலே குடும்பத்தை சமாதானப்படுத்துவதற்காக தனது கனவு என் சொந்த ஊருக்கு வருகிறார்.
கட்டுப்பாடோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தன் கணவர் திகந்த் மஞ்சாலே குடும்பத்தில் உள்ளவர்களை மனதில் இடம் பிடிக்க தனக்குத் தெரிந்த தெரியாத பல்வேறு விஷயங்களை செய்து கதாநாயகி சமந்தா நல்ல பெயர் வாங்க முயற்சி செய்கிறார்.
இதற்கிடையே, சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கொலை குற்றவாளி குல்ஷன் தேவய்யா, சிறைச்சாலையில் இருந்து தப்பித்து கதாநாயகி சமந்தாவை தேடி வருகிறார்.
கதாநாயகி சமந்தாவை தன்னுடன் அழைத்துச் செல்ல முயற்சிக்கும் குல்ஷன் தேவய்யா, அதற்கு சம்மதிக்கவில்லை என்றால், மொத்த குடும்பத்தையும் ஒரு ஆள் விடாமல் அழித்து விடுவதாக மிரட்டுகிறார்.
தன்னுடைய கணவர்,திகந்த் மஞ்சாலே குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஆபத்தில் இருந்து காக்கும் பணியில் ஈடுபடும் கதாநாயகி சமந்தா, அதில் வெற்றி பெற்றாரா?, வெற்றி பெறவில்லையா?,
கதாநாயகி சமந்தாவை குல்ஷன் தேவய்யா, தன்னோடு அழைத்து சென்றாரா?, அழைத்து செல்லவில்லையா?, என்பதுதான் இந்த‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தில் கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கிறார்.
சாதாரணமாக அமைதியாக அறிமுகமாகும் கதையின் நாயகி சமந்தா, தன்னையும், தன் கணவரையும் கணவர் குடும்பத்தையும் கொலை செய்ய வருபவர்களை எதிர்த்து நிற்கும் காட்சிகளில் புயலாக மாறி ஆக்ஷனில் அசத்துகிறார்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் சமந்தாவின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திகந்த் மஞ்சாலே, மாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கெளதமி, மாமனார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆனந்த், பாட்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி, தோழி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மன்ஜூஷா, கொழுந்தன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சைதன்ய கிருஷ்ணா, கணவரின் தம்பி மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீமுகி, கணவரின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களது பணியை மிகவும் சரியாக செய்திருக்கிறார்கள்.
தன்னுடைய அழகான சிரிப்பாலும மற்றும் குறும்புத்தனமான நடிப்பு என ஆண்மைத்தனமாக, ஆக்ஷன் மற்றும் துப்பாக்கியை எந்தி எதிரிகளை சூடு காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை வியக்கும் விதத்தில் கையாண்டிருக்கும் சமந்தா, புடவை கட்டிய பூலான்தேவியை போலவே வலம் வந்து திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குல்ஷன் தேவய்யா, பெரிய அளவில் மிரட்டவில்லை என்றாலும், கதையின் நாயகி சமந்தா பற்றிய உண்மையை வெளிக்கொண்டு வரும் காட்சிகளில் கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு மூலம் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமல்லாமல் அனைத்து காட்சிகளையும் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகள் மற்றும் மாஸ் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
தமிழ் திரைப்பட உலகில் மட்டுமல்லாமல் இந்திய திரைப்பட உலகில் பல வருடங்களாக, பல்வேறு விதமான கதைகளில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ஆக்ஷன் கமர்ஷியல் மாஸ் கதை தான் என்றாலும், அதை குழந்தை குட்டியுடன் குடும்பத்துடன் பார்க்கும்படியான திரைப்படமாக மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் பி.வி.நந்தினி ரெட்டி.
மொத்தத்தில், ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் முழுமையான குடும்ப ஆக்ஷன் மற்றும் பொழுதுபோக்கு திரைப்படமாக கொடுத்து திரைப்பட ரசிகர்களை திருப்திப்படுத்தி விடுகிறார்.



