‘மீசையை முறுக்கு 2’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- ஹிப்ஹாப் தமிழா, சைத்ரா ஜே ஆச்சார், கேதிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன், ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், கருணாகரன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஹிப்ஹாப் தமிழா.
ஒளிப்பதிவாளர் :- பாலாஜி சுப்ரமணியம்.
படத்தொகுப்பாளர் :- பென்னி ஒலிவர்.
இசையமைப்பாளர் :- ஹிப்ஹாப் தமிழா.
தயாரிப்பு நிறுவனம் :- அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்.
தயாரிப்பாளர்கள் :- குஷ்பூ சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார்.
மக்கள் தொடர்பு :- ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ், சதீஷ்குமார் S2 Media.
வெளியீட்டு தேதி :- 25 செப்டம்பர் 2026.
ரேட்டிங் :- 3./5.
மீண்டும் ஒரு முறை ‘வைப்’ ஏற்றும் ஹிப் ஹாப் தமிழா ஆதி! 2017-ல் வெளியான ‘மீசைய முறுக்கு’ மூலம் இளைஞர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகர் இசையமைப்பாளர் இயக்குநர் பிண்ணனி பாடகர் பாடலாசிரியர் ஹிப் ஹாப் தமிழா ஆதி, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே தலைப்புடன் களமிறங்கியிருக்கும் திரைப்படம் தான் ‘மீசைய முறுக்கு 2’.
கானா பாடல்களை பாடி கொண்டிருக்கும் கானா பாடகரான கதாநாயகன் ஹிப்ஹாப் ஆதி, அந்த கானா என்ற கலையை வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டுவதற்காக முயற்சிக்கிறார்.
இசை நிகழ்ச்சிகளில் மற்ற இசைக்கலைஞர்கள் போலவே மேடைகளில் கானா பாடலை பாட வேண்டும் என்ற கதாநாயகன் ஹிப்ஹாப் ஆதி, முயற்சி தோல்வியடைய, கதாநாயகன் ஹிப்ஹாப் ஆதி, மகன்அதே முயற்சியில் ஈடுபட்டு இசைத்துறையில் சாதிக்க வேண்டுமென முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
கதாநாயகன் ஹிப்ஹாப் ஆதியின் வாழ்க்கை பல்வேறு சூழ்நிலையால் தாதா மகன் முயற்சிகள் அது எதுவும் நடக்காமல் போக, மூன்றாவது தலைமுறையிலும் அத்தகைய ஒரு போராட்டத்தை எதிர்கொள்ளும் கதாநாயகன் ஹிப்ஹாப் ஆதி கானா பாடல்களை பாடி வெற்றி பெற்றாரா? வெற்றி பெறவில்லையா? என்பதுதான் இந்த ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் கதாநாயகனாக ஹிப்ஹாப் ஆதி நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஹிப்ஹாப் ஆதி வழக்கம் போல் இளைஞர்களை ஜாலியாக வைப் பண்ண வைக்கும் விதத்தில் ஆட்டம், பாட்டம் என்று திரைப்படம் முழுவதிலும் கலகலப்பாகவும், சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்த ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் முன்று கதாநாயகிகளாக சைத்ரா ஆச்சார், கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் நடித்திருக்கிறார்.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் சைத்ரா ஆச்சார், கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் என் ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஒரு கதாநாயகி என்று மூன்று கதாநாயகிகளும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை எந்தவிதமான குறையில்லாமல் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கதாநாயகன் ஹிப்ஹாப் ஆதி நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹர்சத் கான், சிறப்பாக நடித்திருக்கிறார்.
மற்றும் கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், சாரா, கருணாகரன் உள்ளிட்ட அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பான முறையில் கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம் திரைப்படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, மூன்று காலக்கட்டங்களின் வேறுபாடுகளை காட்சிப்படுத்தி மிகவும் நேர்த்தியாக முறையில் திரைப்படம் ஆக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
2017-ல் வெளியான ‘மீசைய முறுக்கு’முதல் பாகத்தின் அதே மையக்கருவை ஒரு கதையும், மறு பக்கம் சென்னை கானா கலைஞர்கள் மற்றும் அவர்களுக்கான அங்கீகாரம் என்ற புரட்சி கதையையும் மிக மிக இன்று ரசிகர்கள் கொண்டாட கூடிய திரைக்கதை அமைத்து இளைஞர்களை ஈர்க்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஹிப்ஹாப் ஆதி.
மொத்தத்தில், ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை ஜெயித்து மீசைய முறுக்கியிருக்கிறார்.











