’மாயபிம்பம்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- ஜானகி, ஆகாஷ், ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கே.ஜே. சுரேந்தர்.

ஒளிப்பதிவாளர் :- எட்வின் சகாய்.

படத்தொகுப்பாளர் :- வினோத் சிவகுமார்.

இசையமைப்பாளர் :- நந்தா.

தயாரிப்பு நிறுவனம் :- செல்ஃப்ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- K. J. சுரேந்தர்.

ரேட்டிங் :-  3./5.

மருத்துவக் கல்லூரி படிக்கும் மாணவர் கதாநாயகன் ஆகாஷ், கல்லூரிக்கு பேருந்து பயணிக்கும் போது  கதாநாயகி ஜானகியை முதல் சந்திப்பில் கதாநாயகன் ஆகாஷ்க்கு, ஈர்க்கப்படுகிறார்.

கதாநாயகி ஜானகியை மறுமுறை சந்திக்கும் போது அந்த சந்திப்பு ஒரு விபத்தில் முடிகிறது.

ஆனால், அந்த விபத்து கதாநாயகன் ஆகாஷ் மற்றும் கதாநாயகி ஜானகி இருவரையும் மீண்டும் சந்திக்க வைக்கும் போது  பழகுவதற்கான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கிறது. 

கதாநாயகன் ஆகாஷ் மற்றும் கதாநாயகி ஜானகி இருவரையும் மீண்டும் சந்திக்க வைக்கும் அந்த சூழல் மற்றும் அந்த சூழலில் நடக்கும் சம்பவங்களின் உண்மை பிம்பத்தை பார்க்காமல், மாயபிம்பத்தை பார்க்கும் கதாநாயகன் ஆகாஷின் செயல், மற்றும் அவருடைய வாழ்க்கையை எப்படி எல்லாம் புரட்டிப்  போட்டது என்பதுதான் இந்த மாயபிம்பம் திரைப்படத்தின்  மீதிக்கதை.

இந்த மாயபிம்பம் திரைப்படத்தில் புதுமுக  கதாநாயகனாக ஆகாஷ் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஆகாஷ், தனது இயல்பான நடிப்பு மூலம் ரசிகர்களின்  கவனத்தை ஈர்க்கிறார்.

இந்த மாயபிம்பம் திரைப்படத்தில் புதுமுக கதாநாயகியாக ஜானகி நடித்திருக்கிறார்.
 
சுமதி என்ற கதாபாத்திரத்தில் புதுமுக கதாநாயகியாக நடித்திருக்கும் ஜானகி, நமது பக்கத்து வீட்டு பெண் போல் உள்ளது போல மிக எளிமையாக இருந்தாலும், ரசிகர்களை சட்டென்று கவர்ந்து  இழுக்கிறார்.

கதாநாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் புதுமுகங்கள் என்றாலும், எந்தவித பதற்றமும் இல்லாமல்  திரைப்படம் முழுவதும் இயல்பாக நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

கதாநாயகியின் தாய் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகை மற்றும் அண்ணன், அண்ணி கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் என பெரும்பாலானவர்கள் அதிகம் அறிமுகம் இல்லாத முகங்களாக இருந்தாலும், தங்கள் நடிப்பின் மூலம் தங்களது கதாபாத்திரங்களை ரசிகர்களின் மனதில் எளிதில் நடிப்பின் மூலம் பதிய வைத்து விடுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எட்வின் சகாயின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்

இசையமைப்பாளர் நந்தாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.

காதல் கதையாக இருந்தாலும், அதை புதிய கோணத்தில் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் கே.ஜெ.சுரேந்தர்.

மொத்தத்தில், ‘மாயபிம்பம்’ திரைப்படம் சிறந்த காதல்.

error: Content is protected !!