இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவுடன் பணியாற்றிய நினைவுகள் என்றும் மறக்க முடியாது! இயக்குனர் எழுத்தாளர் ராசி அழகப்பன் இரங்கல் !
இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவுடன் பணியாற்றிய நினைவுகள் என்றும் மறக்க முடியாது! இயக்குனர் எழுத்தாளர் ராசி அழகப்பன் இரங்கல் !
சென்னை 04 அக்டோபர் 2026 பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் மறைவுக்கு, அவருடன் இணைந்து பணியாற்றிய இயக்குநரும் எழுத்தாளருமான ராசி அழகப்பன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தில் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் அவர்களுடன் துணை இயக்குநராக பணியாற்றியிருக்கிறேன்.
அதனைத் தொடர்ந்து ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘மகளிர் மட்டும்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
கமல்ஹாசன் சார் மூலமாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் எனக்கு அறிமுகம் கிடைத்தது.
அந்த காலகட்டத்தில் சிங்கீதம் சீனிவாசராவ் அவர்களுடன் பணியாற்றிய அனுபவங்கள் என் திரைப்பயணத்தில் என்றும் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கின்றன.
இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் அவர்கள் அன்பும், அரவணைப்பும் நிறைந்த மேன்மைமிகு இயக்குநர்.
தன்னுடன் பணியாற்றியவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரக்கூடிய உயர்ந்த பண்பாளர்.
நான் தற்போது வெளியூரில் இருக்கிறேன். அவர் மறைந்த செய்தியைக் கேட்ட உடனேயே மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
சில மாதங்களுக்கு முன்புதான் அவரது இல்லத்திற்குச் சென்று அவரை சந்தித்து நீண்ட நேரம் பேசி விட்டு வந்தேன்.
அந்த சந்திப்பு தற்போது மனதில் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது.
அவருடன் தற்போது இருக்கும் இயக்குநர் பூர்ணப்பிரக்ஞாவிடம் தொலைபேசியில் விசாரித்து, எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தேன்.
நாளை சென்னை சென்று சிங்கீதம் சீனிவாசராவ் அவர்களின் உடலுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்த இருக்கிறேன்.
எப்போதும் நேர்மறையான சிந்தனையுடன் வாழ்ந்த ஒரு சிறந்த இயக்குநர், ஒரு அன்பான மனிதர், ஒரு காலக்கொடையை நாம் இழந்துவிட்டோம்.
அவரது மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஆழ்ந்த இரங்கல்களை இவ்வாறு இயக்குனர் எழுத்தாளர் ஷராசி அழகப்பன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.











