இயக்குநர் ஆர்.பி. பாலா இயக்கத்தில் நடிகர் நவீன் சந்திராவின் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் ஆர்.பி. பாலா இயக்கத்தில் நடிகர் நவீன் சந்திராவின் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு!

சென்னை 27 அக்டோபர் 2026 இயக்குநர், தயாரிப்பாளர், டப்பிங் இயக்குநர் என திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் முத்திரை பதித்து வரும் ஆர்.பி. பாலா, முன்னணி ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நவீன் சந்திரா முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

‘லெவன்’ படத்தில் சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளை குவித்த நவீன் சந்திரா, தான் நடிக்கும் பாத்திரங்களை மிகவும் கவனமாகத் தேர்வு செய்து வருகிறார். அவரது 51-வது படமான இது, ஒரு புதுமையான கதைக் களத்தை மையமாகக் கொண்டுள்ளது.ஆர்.பி. பாலா பிலிம்ஸ், பி.ஜி. முத்தையா புரொடக்ஷன்ஸ் பேனர்களில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு திங்கட்கிழமை (அக்டோபர் 26) அன்று சென்னையில் நிறைவுற்றது. படம் சிறப்பாக உருவாகியிருப்பதை குழுவினர் அனைவரும் இணைந்து கொண்டாடினர்.ஹரிபிரியா ரோஷிணி, பால சரவணன், காளி வெங்கட் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்ய, சக்தி பாலாஜி இசையமைக்க, அஜய் மனோஜ் படத்தொகுப்பை கையாளுகிறார்.

கலை இயக்கம்: டி. கிராபோர்டு, ஸ்டண்ட்: டேஞ்சர் மணி, பாடல்கள்: மோகன் ராஜா, ஒலிப்பதிவு: ராஜா நல்லையா, மக்கள் தொடர்பு: நிகில் முருகன். அனீஷா ரெஹானா மற்றும் ஹகினோ ஷுன்சுகி கெவின் இந்த திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆவார்கள்.ஆர்.பி. பாலா, பி.ஜி. முத்தையா தயாரிப்பில் ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இதர பணிகளையும் முடித்து படத்தை திரையரங்குகளில் விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

CLOSE
CLOSE
error: Content is protected !!