‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- நயன்தாரா, ஊர்வசி, சினேகா, இணியா விஜய், ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு, அபிநயா, ராமச்சந்திரா ராஜி, சிங்கம் புலி, விச்சு விசுவநாத், மைனா நந்தினி, இனியா, நிதின் சத்யா, ஸ்ருதி. எஸ், வி.ஆர். சுவாமிநாதன், சிவகுமார். எஸ்., சுனில் வர்மா இந்துகுரி, வர்ஷினி வெங்கட், பழ. கருப்பையா, ஆனந்த ஆதிஷ்ட லட்சுமி, டெப்லினா சகி. மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சுந்தர்.சி.
ஒளிப்பதிவாளர் :- கோபி அமர்நாத்.
படத்தொகுப்பாளர் :- ஃபென்னி ஆலிவர்.
இசையமைப்பாளர் :- ஹிப் ஹாப் தமிழா.
தயாரிப்பு நிறுவனம் :- வேல்ஸ் பிலிம் இண்டர்நேசனல், அஸ்வினி சினி மேக்ஸ், ஐவி என்டர்டைன்மென்ட்.
தயாரிப்பாளர் :- ஐசரி கணேஷ்,
குஷ்பூ சுந்தர், குசுமிதா கனேஷ்
விக்னேஷ் சிவன், நயன்தாரா, ஆசான் சக்சேனா.
மக்கள் தொடர்பு :- சதீஷ் ( AIM )
வெளியீட்டு தேதி :- 06 நவம்பர் 2026.
ரேட்டிங் :- 3.5./5.
சென்னையில் காவலராகப் பணியாற்றும் கதாநாயகி நயன்தாராவுக்கு மைலாஞ்சி என்ற ஊரைப் பற்றிய கனவுகளும் மர்மமான அனுபவங்களும் அடிக்கடி ஏற்படுகின்றன.
கதாநாயகி நயன்தாரா அந்த மைலாஞ்சி என்ற ஊருக்குச் சென்ற பிறகு, சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தீயசக்தியின் வரலாற்றுடனும் மூக்குத்தி அம்மனுடனும் தனக்குள் உள்ள தொடர்பை அறிகிறார்.
இந்த நிலையில் மீண்டும் தீயசக்தியை எதிர்கொண்டு அம்மனாக இருக்கும் கதாநாயகி நயன்தாரா தன்னைக் காப்பாற்றிக் கொண்டாரா?, காப்பாற்றிக் கொள்ளவில்லையா?, என்பதுதான் இந்த ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா காவலர் மற்றும் அம்மன் என இரு பரிமாணங்களிலும் கம்பீரமாகத் தோன்றுகிறார்.
குறிப்பாக கதாநாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா அம்மன் தோற்றத்திலும் இறுதிக்கட்டக் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஊர்வசி தனது இயல்பான நடிப்பால் திரைப்படத்திற்குச் சிறப்பு சேர்க்கிறார்.
வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரெஜினா கசாண்ட்ரா வில்லத்தனமான கதாபாத்திரத்தில் வலுவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
யோகி பாபுவின் நகைச்சுவை எதிர்பார்த்த அளவுக்குப் பல காட்சிகளில் கைகொடுக்கவில்லை.
இந்த ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கொடுத்ததை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு மூலம் பிரம்மாண்டமான காட்சிகளுக்கு அழகு சேர்க்கிறது.
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பக்தி உணர்வையும் ஆக்ஷன் காட்சிகளின் வேகத்தையும் உயர்த்துகிறது.
விஷுவல் எஃபெக்ட்ஸ் சில இடங்களில் வியப்பை ஏற்படுத்தினாலும், சில காட்சிகளில் செயற்கைத்தன்மை தெரிகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றையும் நிகழ்கால மர்மங்களையும் ஒன்றோடொன்று இணைத்து, மகாசக்தியின் தெய்வீகப் போராட்டத்தைப் பிரம்மாண்டமான கற்பனை உலகில் விரித்திருக்கிறார் இயக்குநர் சுந்தர். சி.
ஒரு பெண் காவலரின் கனவுகளில் தொடங்கும் மர்மப் பயணம், மறைந்திருக்கும் உண்மைகளையும் முற்பிறவி தொடர்புகளையும் வெளிப்படுத்தி, நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான சக்திவாய்ந்த மோதலாக உருவெடுக்கிறது.
மொத்தத்தில், மூக்குத்தி அம்மன் 2 – திரைப்படம் மகாசக்தியின் பிரம்மாண்டம் மற்றும் மர்மங்கள் நிறைந்த கதையில் மகாசக்தியின் அவதாரம், தீய சக்திகளை எதிர்கொள்ளும் தெய்வீகப் போராட்டம்!












