‘ஹை’ (Hi) திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- கவின், நயன்தாரா, ராதிகா சரத்குமார், பாக்யராஜ்.கே, பிரபு, அம்ருதா சீனிவாசன், Vtv கணேஷ், ஃபெப்சி விஜயன், ரெஞ்சி பணிக்கர், சத்யன், ஆதித்ய கதிர், குரேஷி, காவியா அறிவுமணி, மிர்ச்சி கெமி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- விஷ்ணு எடவன்.
ஒளிப்பதிவாளர் :- ராஜேஷ் சுக்லா.
படத்தொகுப்பாளர் :- பிலோமின் ராஜ்.
இசையமைப்பாளர் :- ஜென் மார்ட்டின்.
தயாரிப்பு நிறுவனம் :- செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, ரவுடி பிக்சர்ஸ் & Z ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர்கள் :- எஸ்.எஸ்.லலித் குமார், விக்னேஷ் சிவன், நயன்தாரா உமேஷ் குமார் பன்சால், வினோத் சி.ஜே, கே.எஸ். மயில்வாகனன்.
மக்கள் தொடர்பு :- யுவராஜ்.
வெளியீட்டு தேதி :-ஆகஸ்ட் 28, 2026.
ரேட்டிங் :- 3.5/5.
தனது தாய் ராதிகா சரத்குமார் மற்றும் தந்தை கே பாக்யராஜ் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் சிறு வயது முதல் தன்னுடைய தாய் தந்தை போலவே காதலித்து தான் திருமணம் செய்து கொள்வேன் என ஆசைப்படும் கதாநாயகன் கவினுக்கு காதலும் கை கூடாத காரணத்தால் அவருடைய தாய் ராதிகா சரத்குமார் மற்றும் தந்தை கே பாக்யராஜ் கதாநாயகன் கவினுக்கு திருமணத்திற்காக பெண் பார்க்கிறார்கள்.
தனக்கு தனது பெற்றோர்கள் பெண் பார்க்கும் நிலையில் தான் காதலித்து தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என உறுதியாக இருந்த கதாநாயகன் கவின் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்.
தன்னை பெற்ற தாய் முகத்தை கூட பார்க்காமல் சிறு வயது முதல் தனது தந்தையின் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்த கதாநாயகி நயன்தாரா தனக்கு திருமணம் என்ற பந்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று திருமண ஏற்பாடு நடக்க, திருமணத்தில் விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடி விடுகிறார்.
வீட்டை விட்டு ஓடி வந்த இருவரும் கதாநாயகி நயன்தாரா மற்றும் கதாநாயகன் கவின் சென்னையில் சந்தித்துக் கொள்கிறார்கள்.
இருவரும் முதலில் நட்பாக பழக கதாநாயகன் கவின், தான் எதிர்பார்க்கும் தன்னுடைய காதலி கதாநாயகி நயன்தாரா தான் என நினைத்து அவரை காதலிக்க தொடங்குகிறார்.
இந்த நிலையில் கதாநாயகி நயன்தாராவிற்க்கு காதல், திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால், கதாநாயகன் கவின் தன்னுடைய காதலை வெளிப்படுத்தாமல் மறைத்து விடுகிறார்.
இதற்கிடையே, கதாநாயகன் கவின், நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் மூன்று மாதம் முழுகாம இருக்கிறார் என கூற கதாநாயகன் கவின், மற்றும் கதாநாயகி நயன்தாரா இருவரும் கணவன் – மனைவியாக சில மாதங்கள் நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இந்த சூழலில் கதாநாயகன் கவின், இந்த சில மாதங்களை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, கதாநாயகி நயன்தாராவை தன் காதல் வலையில் வீழ்த்த முடிவு செய்கிறார்.
கதாநாயகன் கவின், மற்றும் கதாநாயகி நயன்தாரா இருவரும் காதலில் வெற்றி பெற்றார்களா? காதலில் வெற்றி பெற வில்லையா? என்பதுதான் இந்த ‘ஹை’ (Hi) திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ஹை’ (Hi) திரைப்படத்தில் கதாநாயகனாக கவின் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் கோவை தமிழ் பேசும் கவின், காதல் மீது உள்ள ஏக்கத்தையும், ஏமாற்றத்தையும் தன் நடிப்பின் மூலம் மிகவும் அருமையான முறையில் பிரதிபலித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் கவின், பல காட்சிகளை மிக இயல்பாக நடிப்பின் மூலம் ரசிக்க வைத்திருப்பதோடு, காமெடி கலந்த நடிப்பில் சிரிக்க வைக்கிறார்.
இந்த ‘ஹை’ (Hi) திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா மிகவும் அழகாகவும் தனது வழக்கமான பாணியிலான நடிப்பையும், வசன உச்சரிப்பையும் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
கதாநாயகன் கவின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராதிகா சரத்குமார், தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே.பாக்யராஜ், கதாநாயகி நயன்தாரா தந்தை நடித்திருக்கும் பிரபு, சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சுஹாசினி மணிரத்னம் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு மிகப்பெரிய அளவில் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
கணபதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதித்யா கதிர், காமெடி காட்சிகள் அனைத்தும் திரையரங்கமே அதிரும்படியாக சிரிக்க வைக்கிறது.
சத்யன் குரேஷி ஆகியோரது காட்சிகள் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.
அம்ருதா சீனிவாசன், விடிவி கணேஷ், ஃபெப்சி விஜயன் ரெஞ்சி பணிக்கர், சத்யன், ஆதித்ய கதிர், குரேஷி, காவியா அறிவுமணி, மிர்ச்சி கெமி, ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா, திரைப்படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, மட்டுமல்லாமல் கதாநாயகி நயன்தாராவை பளிச்சென்று காண்பித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் கொண்டாடும் வகையில் அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின், பின்னணி இசை காதல் உணர்வுகளை ரசிகர்கள் உணரும் விதமாகவும் பயணித்திருக்கிறார்.
மிக மிக எளிமையான காதல் கதையை, அருமையான திரைக்கதையோடு சொன்னாலும், அமைதியான மற்றும் இதமான உணர்வை கொடுக்கும் திரைப்படமாக சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் விஷ்ணு எடவன்.
மொத்தத்தில், ‘ஹை’ குடும்பத்துடன் கொண்டாடும் திரைப்படமாக அமைந்திருக்கிறது.











