‘ராமாயணம்’ பகுதி 1 திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :-  ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ, ரவி துபே, சன்னி தியோல், அருண் கோவில், லாரா தத்தா, இந்திரா கிருஷ்ணன், ஷீபா சத்தா, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், சுரபி தாஸ், ஷோபனா, விவேக் ஓபராய், சௌரப் சச்தேவா, அதினாத் எம். கோத்தாரே, பைசல் மாலிக், சுஹைல் நய்யார், ஹரிஷ் உத்தமன், ஹரிஷ் உத்தமன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- நிதேஷ் திவாரி.

ஒளிப்பதிவாளர் :-  பங்கஜ் குமார், மகேஷ் லிமாயே.

படத்தொகுப்பாளர் :- ஹுசைஃபா லோகண்ட்வாலா, வில்லியம் ஹாய்.

இசையமைப்பாளர் :- ஏ.ஆர். ரஹ்மான், ஹான்ஸ் சிம்மர்.

தயாரிப்பு நிறுவனம் :- பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ், DNEG, மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- நமித் மல்ஹோத்ரா.

மக்கள் தொடர்பு :- சுரேஷ் சந்திரா, ( Done)

வெளியீட்டு தேதி :- 05 நவம்பர் 2026

ரேட்டிங் :-  3.5./5.

ஒரு கதை பல தலைமுறைகளாகச் சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு தலைமுறைக்கும் அதை மீண்டும் உணரச் செய்வதே உண்மையான கலை.

அத்தகைய சவாலை ஏற்றுக்கொண்டு, இந்தியாவின் போற்றுதலுக்குரிய இதிகாசமான ராமாயணத்தைப் பிரம்மாண்டமான திரை அனுபவமாகக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் நிதேஷ் திவாரி.

அயோத்தியின் இளவரசராக வாழும் ராமரின் வாழ்க்கைப் பயணம், சீதையுடனான திருமணம், அதன் பின்னர் ஏற்படும் வனவாசம் என இதிகாசத்தின் முக்கியமான நிகழ்வுகளை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.

வனவாசத்தின்போது நிகழும் சம்பவங்கள், சீதையை ராவணன் கடத்திச் செல்லும் நிகழ்வு எனத் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான மாபெரும் மோதலுக்கான அடித்தளத்தை இந்த முதல் பாகம் அமைக்கிறது.

ராமரின் பயணத்தை மட்டுமல்லாமல், ராவணனின் எழுச்சி, அவனது ஆற்றல், அவனுக்குப் பின்னால் இருக்கும் மனநிலை ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது கதைக்கு மற்றொரு பரிமாணத்தைச் சேர்க்கிறது.

இதனால் வழக்கமான ராமாயணக் கதை சொல்லலாக மட்டும் இல்லாமல், இரு தரப்பினரின் பயணங்களையும் விவரிக்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது.

ராமர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரன்பீர் கபூர் அமைதியும் கம்பீரமும் கலந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.

கதாபாத்திரத்தின் நிதானம், பொறுமை, வீர உணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்த முயன்றிருப்பது பாராட்டுக்குரியது.

குறிப்பாக, போர் மற்றும் சண்டைக் காட்சிகளில் அவரது உடல்மொழி ரசிகர்கள் கவனம் ஈர்க்கிறது.

சீதை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் பல்லவி, கதாபாத்திரத்திற்கு இயல்பான அழகையும் கண்ணியத்தையும் சேர்த்திருக்கிறார்.

சீதை என்பவர் வெறும் காத்திருக்கும் பெண் கதாபாத்திரம் மட்டுமல்ல; தன்னம்பிக்கையும் துணிச்சலும் கொண்ட ஆளுமை என்பதை வெளிப்படுத்தும் வகையில் அவரது நடிப்பு அமைந்துள்ளது.

ராவணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யஷ் திரையில் தோன்றும் தருணங்கள் தனி கவனம் பெறுகின்றன.

ராவணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யஷ் அவரது தோற்றம், உடல்மொழி, வசன உச்சரிப்பு மற்றும் கம்பீரமான அணுகுமுறை ஆகியவை கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்க்கின்றன.

குறிப்பாக, ராவணனின் ஆளுமையையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் யஷ் தனித்துவமாகத் தெரிகிறார்.

லக்ஷ்மணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரவி துபேவும், கைகேயியாக லாரா தத்தாவும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

இந்த ராமாயணம் திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற துணைக் கதாபாத்திரங்களும் இதிகாச உலகத்தை முழுமையாக்க உதவுகின்றன.

இதிகாசத்திற்கு ஒளி சேர்த்த ஒளிப்பதிவாளர் பங்கஜ் குமார், மகேஷ் லிமாயே.… ‘ராமாயணம்’ ஒளிப்பதிவின் பிரம்மாண்டம்!”

இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், ஹான்ஸ் சிம்மர்.இசையில் இதிகாசத்தின் இதயத்துடிப்பாய் காவியத்திற்கு உயிரூட்டும் இசை மாயம்!

ராமாயணம் என்பது வெறும் போரும் வெற்றியும் பற்றிய கதை அல்ல; அது உறவுகள், தியாகம், கடமை, அன்பு, நம்பிக்கை, தர்மம் ஆகியவற்றைப் பற்றிய காலத்தைக் கடந்த காவியம். அந்தக் காவியத்தை இன்றைய தலைமுறைக்குப் பிரம்மாண்டமான திரைமொழியில் கொண்டு செல்லும் முயற்சியில் மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார்  இயக்குநர் நிதேஷ் திவாரி.

மொத்தத்தில், ராமாயணம் – இதிகாசத்தின் பிரம்மாண்டம்… உணர்வுகளின் ஆழம்… திரையில் உயிர்பெறும் காவியம்!

CLOSE
CLOSE
error: Content is protected !!