நடிகை பிரியங்கா பொருத்தமாக இருப்பாங்க; நடிகர் சிவகார்த்திகேயன் சிபாரிசு?
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான நம்ம வீட்டுப் பிள்ளை படம் நேற்று முன்தினம் வெளியானது.
குடும்ப ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை அடுத்து பி.எஸ்.மித்ரன், ரவிக்குமார், விக்னேஷ்சிவன், நெல்சன் ஆகியோரின் இயக்கத்தில் தலா ஒரு படங்களில் நடிக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
நெல்சன் இயக்கவுள்ள படத்தில் கேங்லீடர் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ள பிரியங்கா அருள் மோகன் என்பவர் கதாநாயகியாக நடிக்கிறாராம்.
இந்த படத்திற்கு நீண்ட நாட்களாக கதாநாயகி கிடைக்கவில்லை என்பதால் பிரியங்காவை நடிகர் சிவகார்த்திகேயனே சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது.











