Friday, June 18
Shadow

சிக்கலில் தவிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்.!

சென்னை 11 ஜூன் 2021

சிக்கலில் தவிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்.!

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலைத் தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

எனவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களை ஓடிடி தளங்களில் வெளியீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது பல திரைப்படங்களின் ஓடிடி வெளியீடு பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி நடித்துள்ள “நரகாசூரன்” இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள “கடைசி விவசாயி” லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா நடித்துள்ள “நெற்றிக்கண்” நடிகை ஹன்சிகா நடித்துள்ள “மஹா” இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்துள்ள “ராக்கி” நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்குனர் அருண் பிரபு இயக்கியுள்ள “வாழ்” ஆகிய திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தான் தயாரித்து நடித்துள்ள “டாக்டர்” திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்வம் காட்டினாலும் இந்த திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஏற்கெனவே சன் டிவி நிறுவனத்திற்கு ஏற்கனவே விற்று விட்டனர்.

இதனால் “டாக்டர்” திரைப்படத்தை பெரிய தொகைக்கு வாங்க ஓடிடி நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

திரையரங்குகள் திறக்க இன்னும் முன்று மாதங்கள் கூட ஆகலாம்.

அதுவரை என்ன செய்வது? என தெரியாமல் கதாநாயகன் கண் கலங்கி நிற்கிறாராம்.

CLOSE
CLOSE